________________
38 மூன்றாம் குலோத்துங்க சோழன் கழுதையேர் கொண்டு உழுது கவடி வித்திப் பாழ் படுத்திவிட்டன. குலோத்துங்கன் பாண்டியன் மேல் கொண்டிருந்த பெருஞ்சீற்றம் இத்தகைய செயல்களால் ஒருவாறு தணிவுற்றது. இப் பெருவெற்றியால் உள்ளம் பூரித்த சோழன், கருவூர் விஜயத்தில் சோழகேரளன்' என்ற பட்டப்பெயர் பூண்டு, விஜயமாமுடிசூடியது போலவே, மதுரையில் சோழ பாண்டியன் என்ற பட்ட மும் வீரமாமுடியுந் தரித்து ஜயஸ்தம்பமும் நாட்டினான். இவ்வாறு சேராது கருவூரையும், பாண்டியரது மதுரையையும் வென்று கைக்கொண்ட விஜயங்களி லிருந்து திரிபுவன வீரன்' என்ற சிறப்புப் பெயர் நம் குலோத்துங்கனுக்கு வழங்குவதாயிற்று. மூன்று தமிழ் நாடுகளுக்குமுரிய வீரன் என்பது இப்பெயரின் உட் பொருளாகக் கொள்ளத்தகும். குலோத்துங்கனது 26-ஆம் ஆட்சியாண்டு முதல் இப் பட்டப் பெயராலேயே இவனைச் சாஸனங்கள் பெரும்பாலும் வழங்கலாயின. பாண்டிய நாட்டைச் சோணாட்டின் பகுதியாக்குவதற்கே நம் சோழன் அப்போரைத் தொடுத்தவனாதலால், வண்டறைதார் வழுதியரைக் கொண்ட பாண்டி மண்டலத்தை சோழபாண்டி மண்டலமென் றெழுபாரும் சொலநிறுத்தி மல்லல்வையை மதுரையையும் மதுரையென்று பேரொழித்துத் தொல்லை முடித் தலைகொண்ட சோழபுரம் என்றருளி
- கவடி - வெள்வாகு.