பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

போர்ச் செயல்கள் 39. தாடொழுத மண்டபத்தில் சேரபாண்டியர் தம்பிரானென்று, பேரெழுதி' என்று மெய்க்கீர்த்தியும் இவனைப் புகழ்ந்தது. இத னால், பாண்டிமண்டலத்துக்குச் சோழபாண்டி மண்டல மென்றும், மதுரைக்கு முடித்தலை கொண்ட சோழபுரம் என்றும் மதுரை அத்தாணி மண்டபத்திற்குச் சேர பாண்டியர் தம்பிரான்' என்றும் பேர்களை வழங்கினன் இவ்வேந்தன் என்பது அறியலாகும். அன்றியும், இவ் வெற்றி மகிழ்ச்சியால் வேட்டை முதலிய பற்பல விளை யாடல்களைப் புரிந்தும், திருவாலவாய்ச் சிவபிரா னுக்குத் தன் பேரால் திருவீதியும், திருநாளும் அமைத்தும், அப்பெருமான் பவனிவிழாவைத் திருவீதி யிற் கண்டும் மகிழ்ந்தான் ; திருவாலவாய்க் கோயிலை, தான் திறைகொண்ட பொன்னால் வேய்ந்ததோடு, இறை யிலிகள் பல அளித்தும் சிறப்பித்தான். இனி, இப் பெரிய மதுராவி ஜயத்தில் வீரர் பெருமா னான இச்சோழன் - பாண்டியனைப் பாண்டியன் என்னும்பேர் மாறிவர நெடும்படைத் தென்னவர்கெட மதுரைகொண்ட தோள்வலிபாடிய பாணனொருவனுக்குப் பாண்டியன் என்னும் பட்டஞ் சூட்டினான் என்றொரு செய்தியையும் இவன் மெய்க் கீர்த்தி கூறுகின்றது. இவ்விஷயம்'ஒன்னார் தேஎம் அவர்கட் டாகவும் நினதெனப் பாண்கடன் இறுக்கும் வள்ளியோய் (புறம்) என்று முன்னோர் புகழ்ந்துள்ள பெருவீரத்திறத்தை