________________
40 மூன்றாம் குலோத்துங்க சோழன் ஞாபகப்படுத்துகின்றது. பகைவர் காடு அவரிடத்தில் இருக்கும் போதே, அதனை ' உன்னது' என்று தன்னைப் பாடிய பாணனுக்கு அளித்து தவும் வள்ளல் என்பது இதன் கருத்து. பாண்டியனைப் பேர் மாற்றிப் பாணனுக்குப் பட்டஞ் சூட்டிய இச்செயலை, தன் சாமந்தருள் ஒருவனான வாணகோவரையனைக்கொண்டு இவ்வரசன் நடத்தினான் என்று தெரியவருகிறது. இது, அச் சாமந்தனைப்பற்றிக் கூறுமிடத்து விளக்கப்படும். இனி, முன்பு விசயமாமுடியையும் வீரமாமுடியை யும் சூடிய குலோத்துங்கன் தன் நோக்கங்கள் யாவும் பூர்த்தியான தற்கு மகிழ்ந்து, அம்மதுரைமா நகரிலேயே விஜாயாபிஷேகமும் வீராபிஷேகமும் செய்து விளங்கி னான். இவ்விரண்டு அபிஷேகங்களும் நடத்தப்பெற்ற நகரம் மதுரையே என்று புதுக்கோட்டைச் சீமைச் சாஸனங்கள் குறிப்பிடுகின்றன. இதனால், விசயமுடி வீரமுடிகள் சூடிய நகரங்கள் வேறாயினும், அவ்வபி ஷேகங்கள் நடைபெற்ற தலம் ஒன்றே என்பதில் ஐய மில்லை. பிற்காலத்தில், வீரபாண்டியன் என்பவனும் இவ்விரண்டு அபிஷேகங்களையும் தில்லையில் நடத்திக் கொண்டான் என்று கூறப்படுதல் இதனுடன் ஒப்பிடத் தக்கது. குலோத்துங்கனது இம் மதுரா விஜயம், பாண்டிய ருடன் மூன்றாம் முறை பொருது பெற்றதாகும். இச் சோழனது 24-ம் ஆண்டில் அமைந்த திருவாரூர்ச் சாஸனத்தில், மதுரையில் இவன் பெற்ற திரிபுவன வீர தேவன் என்ற சிறப்புப் பெயர் காணப்படுவதனால், அவ் வாட்சிக் காலத்துக்கு முன்பு- அஃதாவது கி. பி. 1202-க்குச் சிறிது முன்பு- மேற்குறித்த அபிஷேகங் களைப் புரிந்து கொண்டான் நம் வேந்தன் என்பது தெரியலாகும். இதுவரையில் கூறிவந்த வீரச்செயல்க