உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

50 மூன்றாம் குலோத்துங்க சோழன் இராமாயணத்தைப் பாடத் தொடங்கி, ' எண்ணிய சகாத்த வெண்ணூற்றேழின்மேல்' என்றபடி கி. பி. 1185-ல் அஃதாவது ஏழாண்டுகளில் அப் பெருங்காப்பி யத்தை முடித்தார் என்றும், நம் சோழன் காலத்தேதான் அவர் வாழ்ந்தவர் என்றும் முடிவுகட்டி ஐயங்கா ரவர்கள் எழுதியவை பெரும்பாலும் ஆராய்ச்சி வல்ல அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளற்குரியன. 5. குணவீர பண்டிதர் இவர் ஒருஜைனப் பெரியார் ; களந்தை வச்ச ணந்தி முனிவரின் மாணாக்கர். இவரால் எழுத்துச் சொற்களின் இலக்கணங்களைப்பற்றி நேமிநாதம் என்ற சின்னூலும், யாப்பமைதிபற்றித் தம்மாசிரியர் பேரால் வச்சணந்திமாலை என்ற வெண்பாப் பாட்டி யலும் இயற்றப்பட்டுள்ளன. பின்ன தான பாட்டியலின் நூற்பாயிரத்தில், திரிபுவனதேவன் என்ற அரசனது அவைக்களத்தே தம் நூல் அரங்கேற்றப்பட்டதாக இக் குணவீரபண்டிதரே குறிப்பிட்டுள்ளார். இவர்கூறிய திரிபுவன தேவன் என்பான், நம் சோழனான திரிபுவன வீர தேவன் என்பதில் ஐயமில்லை. உரைவாணர் தங்கள் நவை காணின் மாற்றுங் குலோத்துங்கன் என்ற கோவையாசிரியர் கூற்று, வச்சணந்திமாலை போன்ற நூலுரைகள் இவ்வரசன் திருமுன்பு அரங் கேற்றப்பட்டதைக் குறிப்பதுபோலவே தோன்றுகிறது. 6. அரும்பாக்கத்து அருணிலை விசாகன் சங்க காலத்தில் இயற்றப்பட்ட பாரதமொன்றும், தெள்ளாறெறிந்த நந்திவர்மன் (III) காலத்தில் இயற் றப்பட்ட பாரதமொன்றும் தவிர, நம் சோழவேந்தன்