________________
கலை வளர்ச்சி 51 காலத்திலும் தமிழ்ப்பாரதமொன்று இயற்றப்பட்ட தென்பது, திருவாலங்காட்டுச் சாஸன மொன்றால் தெரிய வருதல் குறிப்பிடத் தக்கதாகும். அக் கல் வெட்டில் 'ஜயங்கொண்ட சோழமண்டலத்து மண விற் கோட்டத்துத் திருப்பழையனூர் நாட்டுத் திரு வாலங்காட்டுத் திருவரங்கில் அண்டமுற நிமிர்ந்தருளின நாயனார்க்கு திருநந்திவிளக்கொன்று, குன்றவத்த னக் கோட்டத்து இல்லத்தூர் நாட்டு அரும்பாக்க முடையானான அருணிலைவிசாகன் திரைலோக்ய மல்லன் வத்ஸராஜன் என்பார் இக்குலோத்துங்கன் ஆட்சியின் 32-ஆம் வருஷத்திலே அமைத்தனர் என்றும் இவர் பாரதந் தன்னை அருந்தமிழ்ப் படுத்திச் சிவ நெறி கண்டவர் என்றும் கூறப்பட்டுள்ளன. இக் குறிப்புக்களிலிருந்து, நம் வேந்தனது ஆட்சியின் பிற்பகுதியில் அதாவது கி. பி. 1210-க்குச் சிறிது முன்பு பாரதம் தமிழில் செய்யப்பட்ட தென்பதும், அதனைச் செய்தவர் தமிழ்த் தலைவருள் ஒருவராய் அரசாங்கத்தில் மேம்பட்டிருந்தவர் என்பதும், சிவ நெறிச் செல்வர் என்பதும் தெரிய வருகின்றன. இப்பாரதம் நம் காலத்தில் வழக்கு வீழ்ந்தது வருந்தத் தக்கது. 10876o 7. திருவரங்கத்தமுதனார் விசிஷ்டாத்வைத மதஸ்தாபகரான ஸ்ரீ இராமா நுஜாசாரியர்மேல் இராமாநுச நூற்றந்தாதிவாடிய வர் திருவரங்கத்தமுதனார் என்ற பெரியார் ஆவார். இவ்வந்தாதி வைஷ்ணவ சமயத்தாரால் பெரிதும் போற்றப்பட்டும், நாலாயிரப் பிரபந்தத்தில் சேர்க் கப்பட்டும் வழங்கி வருவதென்பது பலரும் அறிக்