உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

52 மூன்றாம் குலோத்துங்க சோழன் ததே. இவ்வந்தாதியாசிரியர் நம் சோழர்பெருமான் காலத்திலும் வாழ்ந்தவர் என்பது, சாஸன வழியால் இப்போது அறியப்படுகின்றது. நடுநாட்டுத் திருக்கோவ லூர்த் திருமால் கோயிலில், நம் குலோத்துங்கனது ஆட்சி மூன்றாமாண்டில் அமைந்த கல்வெட்டொன்றில் ' இராஜராஜ சேதியராயர் என்பார் ஆணைப்படி வன்னிய மலையமான் என்ற அதிகாரி, பெரிய கோயில் நந்தவன மொன்றன் கைங்கரியத்தை நடத்தி வருவதற்காகச் சில நிலங்களை மூங்கிற்குடி திருவரங்கத்தமுதனார்க்கு அளித்தனர் என்று காணப்படுகின்றது. இதனால் இராமானுஜர் திருமுன்பு நூற்றந்தாதி பாடி அரங்கேற்றிய இவ் வமுதனார், நம் சோழன் ஆட்சித் தொடக்கம் வரை வாழ்ந்தவர் என்பது பெறப்படுகின்றது. இப்பெரியார் 80, 85-பிராயம் வாழ்ந்திருந்தவர் எனின், இது நம் வேந்தன் ஆட்சிக் காலத்துடன் பொருத்தமாகும். 8. பவணந்தி முனிவர் நம் சோழவேந்தனது ஆட்சிக் காலத்தில் குவ ளால புரத்திலிருந்து ஆண்டுவந்த கங்கவரசன், சீயகங்கன் அமராபரணன் என்பவன். இவன் இக் குலோத்துங்கன் ஆணைக் கடங்கியிருந்த சிற்றர சருள் ஒருவனாவான். இவ்வரசன் கன்னடம் பயிலும் நாட்டவனாயினும், தமிழபிமானம் மிகுதியும் உடையவ னாய்த் தமிழ்ப்புலவர்களை ஆதரித்துவந்தனன். தன் நாட்டை யடுத்துள்ள கொங்கு மண்டலத்தில் சீனாபுரம் என்ற சனகையில் வாழ்ந்தவரும், சைனப் பெரியாருமான பவணந்தி முனிவரைக் கொண்டு நன்னூல் என்ற அரிய இலக்கண நூலை இயற்றுவித்தவன் இவனே.