உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சமயநிலையும் அறச்செயல்களும் 55 வரும், சாண்டில்ய கோத்திரத்தவருமான ஸ்ரீ கண்டசம்பு என்பாரின் புத்திரர் என்றும், திரிபுவனம் என்ற ஊரி லுள்ள கோயில் இவ்வாசாரியாரால் பிரதிஷ்டை பெற்றது என்றும் தெரியவருகின்றன. இவனன்றி, சுவாமி தேவர் என்ற மடாதிபதி ஒரு வரும் சோழராட்சியில் பிரசித்தராய் விளங்கினார். நம் அரசனுடைய தமையன் காலத்தே, தம் தபோமகிமை யால் ஈழப்படைகளை நாட்டை விட்டு ஓடும்படி செய்து புகழ்பெற்ற சுவாமிதேவர் இவர் என்றே தோன்றுகிறது. இப் பெரியார் பிரதிஷ்டித்த அச்சுத மங்கள சிவாலயத் துக்கும், நம் அரசன் தன் 5-ஆம் ஆண்டில் இறையிலி அளித்துள்ளான். திருக்கடவூர்க்கோயிலில் நம் சோழ னால் விதிக்கப்பட்டிருந்த ஒழுங்குகளை மாற்றி, இம் மடாதிபதி வேறு புதிய ஒழுங்குகளை ஏற்படுத்தினார் என்றும், அதனையறிந்த அரசன் அதற்குத் தன் சம்மத மளித்தனன் என்றும் ஒரு சாஸனம் கூறுகின்றது. இத னால் சைவாசாரியர்களுக்கு இராஜாங்கத்திலிருந்த மதிப் பும். செல்வாக்கும் வெளியாகின்றன. இவற்றோடு, மகா விரதிகளான காளாமுகரின் கோமடமும், சதுரானன பண்டித மடமும் முறையே திருவானைக்கா, திருவொற்றி யூர்களிலும், வாரணாசி பிக்ஷாமடம் என்பதொன்று பக் தணை நல்லூரிலும், வாரணாசி லக்ஷாத்யாய இராவளரின் கொல்லாமடம் என்பது திருப்பாசூரிலும் நம் சோழன் காலத்தில் சைவாசாரிய பீடங்களாக விளங்கின. இவ்வேந்தனது ஆட்சியில் தேவாலயங்களின் சொத்துக்களும், அறப்புறங்களும், நித்த நைமித்திக விழாக்களும் மிக ஒழுங்காகப் பரிபாலிக்கப்பட்டு வந்தன. நாடெங்கும் அமைந்த சிவாலயங்களில் தேருங் குறை களைப் போக்கியும், அவற்றுக்குத் தீங்கிழைத்தோரைத் தண்டித்தும் நேரே கவனித்து வந்தவன் இவ்வரசன்