________________
56 | மூன்றாம் குலோத்துங்க சோழன் அவ்வாலயங்களுக்கு வேண்டிய இறையிலிகளும் திரு வாபரணங்களும் வேண்டியபடி இவனால் அளிக்கப்பட் டுள்ளன. இவன் செய்த அவ்வறச்செயல்களுட் சில வருமாறு: (1) 26-ஆம் ஆண்டில், திருவொற்றியூர்ச் சிவ பிரானுக்கு அவ்வூர் அம்மையொருத்தியின் வேண்டு கோளின்படி திருவாபரணம் திருவாடு தண்டு முதலியன இருமுறை அளித்தது. (2) 26-ஆம் ஆண்டில் உத்தரமேரூர்ப் பிடாரி யார்க்கும் ஸப்தமாதர் ஸ்தானங்களுக்கும் பத்து வேலி நிலம் உதவியது. (3) 12-ஆம் ஆண்டில் சிதம்பரப் பக்கத்திலே இருங்கோளன் என்ற தலைவன் இயற்றிய கோயிலொன் றுக்கு விட்ட பூமிகளை இறைநீக்கி உதவியது. (4) கீழையூரில் சிவாலயத்துக்கும் பிராமணர் வேளாளர்கட்கும் கேடுகள் சூழ்ந்தும், அந்தணன் ஒருவன் வீட்டில் தீயிட்டும், மற்றும் கலகங்கள் விளைத் தும் வந்த இருவர்க்குத் தண்டனைகள் விதித்து அவர்கள் நிலங்களைப் பறிமுதல் செய்தது. (5) 16-ஆம் ஆண்டில், கோவந்த புத்தூரில் மாடா பத்யம் பார்த்துவந்த உத்தியோகஸ்தன் ஒருவன், கோயில் சொத்துக்களைத் திருடிய தற்காகச் 'சிவத் துரோகி' என்ற குற்றம் சாட்டப்பட்டதன் மேல் அவ னது நிலமனைகளைப் பறிமுதல் செய்தது. இவைபோல, மற்றும் அறப்புறங்களைக் காப்பதற் காக அரசனிட்ட கட்டளைகள் பலவாம். இவையன்றித் திருப்பணிகளும் திருவிழாவும் திருவீதிகளும் இவனால் அளிக்கப்பட்டவை பலவுண்டு. அவை :- இராசாக் கணாயன் திருநாள், இராசாக்கள் தம்பிரான் திருவீதி,