________________
சமயநிலையும் அறச்செயல்களும் 57 முடித்தலை கொண்ட பெருமாள் திருவீதி என்றிவ்வாறு இவ்வரசன் பெயர்கள் பெற்று விளங்கின. முதல் இராஜராஜ சோழன், தன் பகைவரிடமிருந்து செயித்துக் கவர்ந்த பொருள்களைச் சிவபிரானுக்குப் பெருவாரியாக வழங்கியது போல, நம் வேந்தனும், மதுரையில் வீராபிஷேகமும் விஜயாபிஷேகமுஞ் செய்து கொண்ட காலத்திலே மதுரை மாநகரை அழகுபடுத் தினன். அன்றியும், அம்மதுரா விஜயத்தில் சேர பாண்டியரிடம் திறைகொண்ட பொன்களையும் பூமி களையும், தன் முன்னோர் வழிபட்ட தில்லை, திருவாரூர், திரிபுவனங்களில் உள்ள கோவில்களுக்கு அளித்தும் மகிழ்ந்தான். இவ்வரிய செய்திகள் யாவும் இவனது புதுக்கோட்டை மெய்க்கீர்த்திகளிற் காணலாம். இனி, திரிபுவனங் கோயிலிற்கண்ட வடமொழிக் கல்வெட்டிலிருந்து நம் சோழனுக்குச் சிவாலயங்கள் எடுப்பதில் இருந்த சிரத்தையும் பக்தியும் நன்கு விளங்கக்கூடியன. இவைபற்றி, ஆசிரியர் ஸ்ரீ நீலகண்ட சாஸ்திரிகள் எழுதிய குறிப்பு கீழ் வருமாறு: மூன்றாங் குலோத்துங்கனை ஒரு பெரிய கட்டட நிர்மாணி என்றே மதிக்கலாம். சோழ சிற்ப முறையில், இவன் செய்வித்த சிற்பங்கள் பேர்போனவை. இவன் காலத்தில் அமைக்கப்பட்ட கட்டடங்களும் சிறப்பாகக் கோயில்களும் புதுகோட்டை சாஸனங்களிலும், திரி புவனம் என்ற ஊரிலுள்ள கம்பாஹரேசுவரர் என்ற திரிபுவனேசுவரர் ஆலயத்தின் கர்ப்பக்கிருகத்துள்ள வடமொழிக் கல்வெட்டிலும் விரித்துக் கூறப்பட் டுள்ளன. மேற்படி திரிபுவனேசுவரர்கோயில், குலோத் துங்கன் ஆட்சியின் ஒரு சிறந்த ஞாபக சின்னமாக விளங்குகிறது. இந்த அற்புதமான ஆலயம், ஆராய்ச்சி யாளர்களால் போதுமானவளவு கவனிக்கப்படவில்லை.