பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

58 மூன்றாம் குலோத்துங்க சோழன் பொதுவமைப்பில் தஞ்சைப் பெரிய கோயிலை இது நமக்கு நினைப்பூட்டினாலும், இதற்கெனச் சில தனிப்பெருமை கள் உண்டு. இதன் திருமதில்கள் முழுதும் அழகிய சிற்ப வேலைகளாலும் சித்திரங்களாலும் நிரப்பப்பட்டுள்ளன. இங்கே உள்ள இராமாயணக்கதை யமைந்த சிற்பங்கள் மிகவும் புகழத்தக்கவை. சித்தாந்த ரத்நாகரத்தின் ஆசிரியரும், ஸ்ரீ கண்டசம்புவின் புதல்வரும் சோழ வேந்தன் குருவுமான ஈசுவர சிவனால் இவ்வாலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். இத்தகைய சிறப்புவாய்ந்த திரிபுவனேசுவரர் ஆலயத்தைத் தவிர, மூன்றாம் குலோத்துங்கன் தில்லை நடராஜப்பெருமானது திருமுக மண்டபத்தையும் கிரீக் திரஜை (சிவகாமி) அம்மனின் கோபுரத்தையும், சிதம் பரப் பிராகாரத்தையும் கட்டுவித்தான் என்று கூறப்பட் டுள்ளது. மேலும், காஞ்சி, மதுரைகளில் உள்ள சிவ பிரான் கோயில்களுக்கும் அருமையான திருப்பணிகள் செய்துள்ளான். திருவிடைமருதூரிலும் திருவா ரூரிலும் தாராசுரத்திலுமுள்ள சிவாலயங்களிடத்தும் இவன் அபிமானம் மிக்கவன். திருவாரூர்ச் சபாமண்ட பமும் பெரிய கோபுரமும் இவன் முயற்சியால் அமைக்கப் பட்டவையே. நம் சோழன், சைவாபிமானி யாயினும், மற்ற வைதிக சமயக் கடவுளர்க்கும், சைன சமயக் கடவு ளர்க்கும் நித்யநைமித்திகங்கட்கு வேண்டிய அறப் புறங்கள் அமைத்து, தனக்குள்ள பொது நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளான். வேலுர்த் திருமால் கோயி லுக்கு மூன்று கிராமங்களை ஒன்றாக்கிக் குலோத் துங்க சோழ நல்லூர் என்று தன் பேரிட்டு அளித்ததோடு, அக்கோயிலுக்கும் குலோத்துங்க சோழ விண்ணகர் என்று தன் நாமத்தைத் தன் ஆட்சி