பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சமய நிலையும் அறச்செயல்களும் 59 3-ஆம் ஆண்டில் வழங்கினன் என்றும், விக்கிரமசோழ புரத்திலுள்ள தன் அரண்மனையிலிருந்து, வில்லவராயர் என்ற உடன் கூட்டத்ததிகாரி மூலம் அவற்றுக்கு வேண்டிய கட்டளைப் பிறப்பித்தான் என்றும் அவ்வூர்க் கல்வெட்டுக் கூறுகின்றது. இவ்வாறே, இவன் அதிகாரி களான திருக்கோவலூர் மலையமான் முதலிய விஷ்ணு பக்தர்கள் திருமால் கோயில்களுக்கும் மடங்களுக்கும் அரசன் அனுமதியுடன் செய்த அறப்புறங்களும் உள் ளன. இவ்வாலயங்களோடு பிடாரியார் கோயிலுக்கும், ஸப்தமாதர் ஸ்தானங்களுக்கும் உத்தரமேரூரில் இச் சோழன் நிலங்கள் அளித்து ஆதரித்துள்ளான். இம்மட்டோ ! புறச்சமயத்தவரான சைனரிடமும் இவன் அபிமானம் வைத்து ஆதரித்திருக்கின்றான். இவனுடைய பெரிய அதிகாரிகளுள், மண்டியங்கிழான் குலோத்துங்க சோழக் காடுவெட்டி என்ற சைன சமயத்தவர் ஒருவரும் விளங்கினர். இவர் ராஜகாரியஞ் செய்து நாயனாரைத் திருவடித் தொழ உனக்கு வேண்டுவன வேண்டிக்கொள்' என்று திரு வுள்ளமாய் அருள.... கோயிலுக்கு 20-வேலி நிலம் திருவுள்ளமாடித்தருளவேணும் என்றும், 'தம் குரு சந்திரகிரிதேவர்க்குக் கொட்டையூர் ஆசிரியப்பட்டம் கொடுத்தருளி அம்பையிலே 20- வேலி அளிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ள, அவ் வேண்டுகோட்படியே திருமுகம் பிரசாதித்தான் நம் சோழன் என்று, திருப்பருத்திக்குன்றுக் கல் வெட்டொன்று கூறுகின்றது. மேலும் தன் 3-ஆம் ஆண்டில் திருநறுங்குன்றைச் சைனப் பெரும்பள்ளிக்கு வேண்டும் நிபந்தங்களுக்கும், அமணபிடாரர்களுக் 1077-5