பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

60 மூன்றாம் குலோத்துங்க சோழன் கும்" இறுப்பதாகப் பதிற்றுவேலி நிலவருவாயை இறை யிலி செய்து 'இந் நிலத்துக்கு அமணபிடாரர்கள் சொன்ன படி செய்வது ; இவர்கள் வசம் கடமை இறுக்க என்று திருவாணையும் இட்டான். இன்னும் (அப்பள்ளி யிற் கோயில் கொண்ட ) அப்பாண்டார்க்குமுன் பிலாண்டு எழுந்தருளுகிற திருவைகாசித் திருநாளுடனே நம்பேரா லேயும் ஒரு திருநாள் எழுந்தருளவேண்டும் என்று அப் பள்ளிக்குரிய பெரியார்கள் கேட்டுக்கொண்டபடி வேண்டிய நிலமளித்ததுடன், "ஆறாவது முதல் நம்பேராலே இராசாக்கணாயன் திருநாள் என்று தைம் மாதத்து அத்தத்திலே தீர்த்த மாகத் திருநாள் எழுந்தருளுவிப்பதாகச் சொன் னோம். இப்படிக்குச் சந்திராதித்தவரை செல்வ தாக, கல்லும் வெட்டிக்கொண்டு இம்முதல்கொண்டு திருநாள் எழுந்தருளுவித்துப் போதுக. என்று தன்னாணை யிட்டுள்ளான், நம் வேந்தர் பெருந்தகை. இவற்றால், நம்சோழன் தன் சமயத்தில் மட்டு மன்றி, அந்நிய மதங்களிடத்தும் தன் அன்பையும் ஆதரவையும் செலுத்திப் பொது நோக்கோடு ஆட்சி புரிந்துவந்தவன் என்பது மிகத்தெளிவாகும்.