பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அத்தியாயம் VIII சாமந்தர்கள் சோழ சாம்ராஜ்யத்தின் அரசாங்க உள் துறைகளை அமைச்சரும் உடன் கூட்டத்து அதிகாரிகளும் மகா சபையார்களும் தலைமையாக நின்று நிர்வகித்து வந்தார்கள். ஆனால் வெளிநாட்டுப் படையெடுப்பு, உள்நாட்டுக் கலகம் முதலியவற்றைத் தடுத்துத் தேச அமைதியைக் காத்துவந்தவர்கள் மண்டல மாக்களும் தண்டத் தலைவர்களுமான சாமந்தர்களே யாவர். இன்னோரின் ஒற்றுமையான பேருதவிகளே சோழ ஏகாதிபத்யத்தைப் பல தலைமுறைகளாகக் காத்து வந்தன. நம் சோழன் காலத்திலும் இத்தகைய தலைவர் பலர் இருந்தனர். இவரெல்லாரும் , தம் சக்கரவர்த்தியிடம் உண்மையான பக்தியும், ஏகாதி பத்யத்தின் பழம்பெருமையைக் காப்பதில் உறுதியும் உடையவர்கள். இவர்களுட் பலர் தங்களுக்குப் பழமையாக உரியனவும், அரசனால் அளிக்கப்பட்டனவு மான நாடுகளை ஆண்டு, பெரும்படைகளைக் கொண்டவர் களாய், வேண்டியபோது தாங்களே படைத் தலைமை பூண்டு அரசனுக்கு உற்றுழியெல்லாம் உதவிவந்தார்கள். நம் சோழர்பெருமான் காலத்தில் விளங்கினவருட் சிறந்தவர்கள் - சேதியராயர் என்ற மலையமான்கள், சம்புவராயர், காடவராயர், அதிகமான்கள், வாண கோவரையர், கங்கர், தெலுங்குச் சோடர்கள் முதலி யோர். சேதியராயர் என்ற மலையமான்கள் :- இவர்கள் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு மலாடு என்ற நடுநாட்டைப் பழங்காலமுதலே ஆண்டு வந்த