உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சாமந்தர்கள் 63 பெயர் வழங்கியிருப்பதனால், சோழ ஏகாதிபத்தி யத்தில் படைத்தலைமை வகித்துவந்தவர் இவர் என்று தோன்றுகின்றது. பின்னவரான நரசிங்கவன்மர் ஆடையூர் நாடாள்வார் என்பவர் நம் அரசனுடைய தமையன் காலத்தில் பெருமானம்பிப் பல்லவராயருடன் சேனைத்தலைமை பூண்டு பாண்டிநாடு சென்று ஈழப் படையோடு பொருது வெற்றி பெற்றவர் என்பது, இலங்கைச் சரித்திரமான மகாவமிசத்தினால் தெரிய வரு கிறது. இவரன்றி, மலையமான் சூரியன் நீரேற்றான், ராஜராஜமலையகுலராயன், இராஜராஜ கோவலராயன், முதலியோரும் நம்வேந்தன் காலத்தில் வாழ்ந்த சேதி யரசர்களே. சம்புவராயர் :- பழைய பல்லவ வமிசத்தவர் என் றும், செங்கேணிக் குடியினர் என்றும் கூறப்படும் இவர்கள், முதற்குலோத்துங்க சோழன் காலத்தி லிருந்தே சோழசாம்ராஜ்யத்தில் தலைமை அதிகாரம் வகித்துவந்தனர் ; வட ஆர்க்காடு, தென்னார்க்காடு ஜில் லாக்களடங்கிய பிரதேசங்களில் இன்னோர் சோழர் பிரதி நிதிகளாய் இருந்து ஆண்டு வந்தனர். பின்பு, அப்பிர தேசங்களின் தலைமையும் உரிமையும் இவர்களுக்கே சொந்தம் ஆயின. நம் சோழன் ஆட்சியின் முற்பகுதி யில் இவ்வமிசத்தவனான செங்கேணி அம்மையப்பன் பாண்டிநாடு கொண்டான் கண்டர் சூரியன் இராஜ ராஜ சம்புவராயன் என்பான் அரசியலில் தலைமை வகித்து விளங்கிய சரமந்தனாகத் தெரிகின்றான். இவன் பெயரி