உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

64 - மூன் 9 மூன்றாம் குலோத்துங்க சோழன் னின்று, பாண்டிய நாட்டுப் போரொன்றில் வெற்றி பெற்றவன் இவன் என்பது தெரியலாகும். இவனன்றி , செங்கேணி மிண்டன் அத்திமல்லன் சம்புவராயன், செங்கேணி அம்மையப்பன் கண்ணுடைப்பெருமாள், வீரசோழன் அத்திமல்லன், குலோத்துங்க சோழச் சம்புவராயன் ஆளப்பிறந்தான் எதிரிலி சோழச் சம்புவராயன் என்போரும் இம் மரபினராய் நம் சோழன் ஆட்சியில் அதிகாரம் வகித்தவர்களே. காடவராயர் :- பல்லவ வமிசத்தவருள் ஒரு கிளை யினரே இவர். திருமுனைப்பாடி நாட்டுக் கூடலூர் சேந்தமங்கலங்களிலிருந்து, சோழர்களின் கீழ்த் தலைமை வகித்து வந்த இவர்கள் தங்கள் அதிகாரத்தை அப் பிர தேசத்தில் பின்பு நிலைநாட்டிக் கொண்டனர். இவர்க ளுடைய ஆதிக்கத்தின் மிகுதியால், பிற்காலத்தில் சோழசாம்ராஜ்யத்துக்கே கேடுவிளைந்த தாயினும், நம் சோழன் ஆட்சியில் இன்னோர் உண்மையான ராஜாபி மானிகளாய்த் தம்மரசனுக்கு உழைத்தவர்கள் எனலாம். இத்தகையவருள் சிறந்தவர்களாகத் தெரிய வருவோர் ஆளப்பிறந்தான் வீரசேகரன், வானிலை கண்டான் இராஜராஜக் காடவராயன், என்போர். இவர்கள் வழியில் வந்தவனே நம் அரசனுக்கு அடுத்த தலைமுறையில் சோழ ஏகாதிபத்தியத்தைச் சிதைத்துத் தன் ஆதிக்கத்தை நாட்டிய கோப்பெருஞ் சிங்கன்.