உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சாமந்தர்கள் 65 அதிகமான்கள் :- இவர்களும் சங்ககாலமுதலே பிரபலம் பெற்றவர்கள். கடையெழு வள்ளல்களுள் ஒரு வனான அதிகமானஞ்சி என்பான் இவர் குலத்து முன்னோன் ஆவன். இன்னோர் , தகடூர் என்ற தலைநகரி லிருந்து ஆண்டுவந்த சேரர்மரபினராவர். அதியேக் திரர், தகடாதி ராயர் என்பன இவர் பட்டப்பெயர்கள். இவர்கள் தலைநகரான தகடூர் சேலம் ஜில்லாவிலுள்ள தர்மபுரி ஆகும். நம் சோழன்காலத்து வாழ்ந்த அதிக மான்கள் : அதிகமான் இராஜராஜ தேவன், அவன்மகன் விடுகாதழகிய பெருமாள், குலோத்துங்க சோழ தகடாதிராயன், சாமந்தன் அதியமான் என்பவர். இவர்களுள் விடுகாதழகிய பெருமானின் சாஸனங்கள் திருமலைக்குன்றில் உள்ளன. இவற்றில், "சேரமான் வமிசத்து அதிகமான் எழினி' "வஞ்சியர் குலபதி, " அஞ்சிதன் வழிவருமவன்' என்று கூறி, தன்னை வள்ளலான அதிகமானஞ்சியின் மரபினன் என்று பாராட்டிக்கொள்ளுதல் காணலாம். இவன் கரிகால் சோழ ஆடையூர் நாடாழ்வான், செங்கேணி அம்மையப்பன் அத்திமல்லன் என்ற இருவருடன் செய்துகொண்ட உடன்படிக்கை யொன்றிலிருந்து, இம்மூவரும் நம் சோழவேந்தனுக்கு அந்தரங்கமாய் ஒத்துழைத்து வந்த வர்கள் என்பது வெளியாகின்றது. வாணகோவரையன் :- மகாபலியின் வமிசத்தவர் களாக வழங்கப்பட்ட இவர்கள், சங்ககாலமுதலே பலம் பெற்ற சிற்றரசராயிருந்தவர்கள். அக்காலத்தில் சோணா டாண்ட கிள்ளிவளவனது பட்டத்துத்தேவி - சீர்த்தி என்பவளை 'மாவலி மருமான் சீர்கெழு திருமகள்