________________
66 மூன்றாம் குலோத்துங்க சோழன் என்று மணிமேகலை கூறுதலும் காண்க. பிற்காலத்தில், இன்னோர் நடுநாடான மகதை மண்டலத்தின் தலைவர் களாய், ஆறகழூர் அல்லது ஆறை என்ற நகரிலிருந்து ஆட்சி செய்து, சோழ ஏகாதிபத்தியத்தின் பெருமை யைத் தாங்கிவந்தார்கள். நம் சோழனது ஆட்சிக் காலத்தின் பெரும்பகுதியில் விளங்கிய வாணவரசன் ஏகவாசகன் குலோத்துங்க சோழ வாணகோவரசன்' என்பவன். இவன் சாஸனங்கள் சேலம், திருச்சிராப் பள்ளி, தஞ்சை ஜில்லாக்களில் அமைந்துள்ளன. இவனன்றி, இக்காலத்தில் மிகவும் பிரபலனாக விளங் கியவன், ஆறகளூருடைய மகதேசன் ராஜராஜதேவன் பொன்பரப்பினான் வாணகோ வரையன்' எனப்பட்டவன். திருவண்ணாமலைக் கோயிலிலும் பிற விடங்களிலும் வரைந்துள்ள கல்வெட்டுக்களில் இவ்வா ணனைப்பற்றிய பாடல்கள் பல உள்ளன. அவை யாவும் சொற்செறிவும் பொருட்பொலிவும் பெற்று விளங்குவன. அவற்றிலிருந்து பெருந்தமிழ்ப் புலவர்களது புகழ்மாலை சூடியவன் இவன் என்பது தெரியலாம். இவனது வீரச் சிறப்பும் வெற்றிகளும் அறச்செயல்களும் அப்பாடல் களில் மிக அழகாகச் சிறப்பிக்கப்படுகின்றன. இவன் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலைப் பொன் வேய்ந்தவனாதலால், 'பொன் பரப்பினான்' என்ற பெயர் இவனுக்கு வழங்கியது. கங்கர்கள் :- இவர்கள் மைசூர்ச் சீமை முதலியன அடங்கிய கங்கபாடியை ஆண்ட அரச மரபினர். 'பங்களர் கங்கர் பல்வேற்கட்டியர்' என்று அப்பக்கத்து அரசர் கூட்டத்தில் ஒருவராக இவரை இளங்கோவடி களும் குறிப்பிட்டனர். இவர்களது இராஜதானி தங்கச்