உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

70 மூன்றாம் குலோத்துங்க சோழன் 10. சோமன் வரந்தருவானான சோளேந்திர சிங்கப் பிருதிகங்கன் என்ற நாட்டுத் தலைவர்கள் பதின்மர் கூடி, இராஜத் துரோகிகளான தலைவர் சிலர்க்கு விரோதமாகச் செய்து கொண்ட ஒப்பந்தம் இங்கே குறிப்பிடத்தக்கது. இது பின்னர் உரிய இடத்தில் விளக்கப்படும். அத்தியாயம் 9 நாட்டுச் செய்திகளும் வழக்குகளும் நெடுங்காலம் ஆண்ட சோழ சக்கரவர்த்திகளுள் நம் வேந்தனும் ஒருவன். நாற்பது ஆண்டுகளுக்கு மேற் பட்ட இவனது வாழ்நாளில் பெரிய போர்களைத் தவிர, வேறு எத்தனையோ அரிய சம்பவங்கள் நடந்திருக்கக் கூடியனவே. அவற்றுள் சாஸனங்கள் மூலம் நமக்குத் தெரியவந்துள்ள நாட்டுச் செய்திகளும் வழக்குக்களும் அடியில் வருவன : 1. வெள்ளப்பஞ்சம் :- நம் சோழனது 12, 13-ஆம் ஆண்டுகளில் பெரு மழையினால் தொண்டை நாடு வருந்தியதென இவனது 14-ஆம் ஆண்டுச் சாஸன மொன்று கூறுகின்றது. ஆனால், இவ்வாறு நேர்ந்த வெள்ளப் பஞ்சம் வேறு நாடுகளில் பரவியிருந்ததாகச் சாஸனத்தால் தெரியவில்லை. 2. வறட்ப ஞ்சம் :-நம் அரசனது 23, 24-ஆம் ஆண்டுகளில் நேர்ந்த மழையின்மையாகிய அநாவிருஷ்டி நாடெங்கும் கொடுமை விளைத்த செய்தி திருப்பாம்புரம், திருவண்ணாமலை இவ்வூர்க் கல்வெட்டுக்களால் வெளியா கின்றது. இவற்றுள் 23-ஆம் ஆண்டுப் பஞ்சத்தில் காசுக்கு முந்நாழி நெல் விற்றதென்றும், வேளாளன்