பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நாட்டுச் செய்திகளும் வழக்குகளும் 71 ஒருவன் தன் மக்கள் இருவருடன் 110-காசுக்குக் கோயில் மடத்துக்கு விலைப்பட்டு அடிமை புகுந்தனன் என்றும் தெரிகிறது. இனி, இருபத்து நாலாவது பஞ்சத்திலே காசுக்கு உழக்கு அரிசி விற்கச் செய்தே, பூண்ட பொன்னும் தேடின அர்த்தமும் நெல்லும் அடைய இட்டுத் திருநதியைக் கட்டி ஏரி கண்டும் காடுவெட்டிக் கட்டைபறித்து நிலம் ஒக்கக் கழனி திருத்தியும்" பஞ்ச நிவாரண வேலைகளிட்டுக் குடிமக்களைக் காப் பாற்றிய புண்ணிய சீலர்கள் அருங்குன்றங் கிழார், மங்கையர்க்கரசியார் என்ற இருவர். இவர்களின் பேருத வியைப் பாராட்டிக் கோயிலதிகாரிகள் இவர்களுக்கு முற்றூட்டாகச் சில நிலங்களை 'ஏரிப்பட்டி' என்று பின்பு அளித்தனர் என்று திருவண்ணாமலைச் சாஸனம் கூறுகின்றது. இக் கொடிய காலங்களில் அரசாங்கத்தார் குடிக ளுக்குச் செய்த உதவி இன்னதென்று தெரியவில்லை. ஆயினும், தருமசிந்தை மிக்கவர்களும் கோயில் தலைவர் களும் இயன்ற உதவிகளைப் புரிந்து குடிமக்களைக் காப் பாற்றிவந்தனர் என்றே தோன்றுகின்றது. 3. ஆற்றுப் பெருக்கால் அழிவு :- நம் வேந்த னது 6-ஆம் ஆண்டில், காவிரி என்னும் விக்கிரம சோழப் பேராறு பெரும் பெருக் கெடுத்து, பற்பல கோயில்களுக்கும் மக்களுக்கும் சொந்தமாயிருந்த நிலங்களை அழித்ததென்றும், அழிப்பட்ட அந் நிலங்களைப் புதிதாக அளந்தும், இறை நீங்கிக் குடிமக்களுக்கு அவற்றைப் பங்கிட்டும், அரசாங்கத்தார் புதிய திட்டங் களைச் செய்யலாயினர் என்றும் சோணாட்டுத் திருமங்