பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நாட்டுச் செய்திகளும் வழக்குகளும் 75 வந்தனர். இவ் வாடல்வல்ல கூத்தர்கள் நிருத்தப் பேரரையர், நிருத்தமானராயன் என்ற சிறப்புப் பெயர் களும், நட்டுவநிலை, நட்டுவக்காணி என்ற உரிமை நிலங் களும் அரசனால் பெற்றிருக்கின்றனர். நம் சோழன் ஆஸ்தானத்தில் இவை பெற்றிருந்தவன் குலோத்துங்க சோழ நிருத்தப்பேரரையன் என்பதை முன்பே குறித் துள்ளேன். இவன் தேவன் உடைய நாயகன் என்ற நிருத்தவரையனிடமிருந்து நட்டுவக்காணியை விலைக் குப் பெற்று அதனைத் தன் மகளுக்கு ஸ்த்ரீதனமாக அளித்தான் என்றும், அம் மகள் கணவன் இக் காணி யுரிமை யடைந்து, மற்றப் பதியிலார்போலக் கோயிலில் நம் அரசன் உத்தரவு பெற்றுக் கூத்து நடத்திவந்தான் என்றும் கூறப்பட்டுள்ளன. இவர்களன்றி, திருவிடை மருதூரில் நட்டுவத்தலைவர் பலர் இவ் விருத்தியை நடத்துவதற்கு அரசனால் நியமிக்கப்பட்டிருந்தனர். இக் கூத்தர்களுள் சாக்கையர் என்பார் ஒரு பிரிவினர். இவர்கள் சங்ககாலம் முதலே நாட்டியக்கலையில் பேர் பெற்றவர் என்பது சிலப்பதிகாரத்தாலும் சாஸனங் களாலும் தெரிகின்றது. இவர்களெல்லாரும் வடமொழி தென்மொழிகளில் வன்மையும் அலங்கார நூற்பயிற்சி யும் பெற்றிருந்தார்கள். தமிழ்த் தண்டியாசிரியரும் இக் கூத்தருள் ஒருவரே என்பது, மன்றத்து நாடக நவிற்றும் வடநூ லுணர்ந்த தமிழ்நூற் புலவன் ... தண்டி' என்று அவர் பாயிரங் கூறுதலால் அறியப்படுகின்றது. 9. வியாகரணதான வியாக்யான மண்டபம் :திருவொற்றியூர்ச் சிவபிரானுக்கு வியாகரண தானப் பெருமாள் என்று ஒரு திருநாமம் வழங்கியுள்ளது. பாணினி முனிவர்க்கு மாகேசுவர சூத்திரங்கள் அருளிச் 1077-6