உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

76 மூன்றாம் குலோத்துங்க சோழன் செய்தவ ராதலால், அப்பிரான் இப்பெயர் பெற்றார். இதற்கேற்ப, அக் கோயிலில் மாணவர் வியாகரணப் பயிற்சி பெறுவதற்காக, சாஸ்திரசாலையொன்று அமைக் திருந்தது. இச்சாலை நன்கு நடைபெறவேண்டி, நம் அரசனது 38-ஆம் ஆண்டில், நெல்லூரை ஆண்ட சிற்றரசனுடைய அதிகாரியொருவர் ' வியாகரணதான வியாக்யான மண்டபம் ' ஒன்றை நிருமித்து உதவியுள் ளார். இவர், குலோத்துங்க சோழன் காவனூர் என்ற கிராமமொன்றையும் அதற்காக உதவினார் என்றும், அதனை நம் வேந்தன் இறையிலியாக்க உத்தரவிட்டான் என்றும் திருவொற்றியூர்ச் சாஸனங் கூறுகின்றது. 10. முன்னோர் கல்வெட்டுக்களையும் அவற்றில் கண்ட அறங்களையும் பாதுகாத்தல் :- முன்னோரான அரசரும் பிறரும் செய்த அறங்கள் கோயில் முதலிய பொது விடங்களில் யாவரும் அறியக் கற்களில் பொறிக் கப்படும். திருப்பணி புரிதற்காக அக் கற்களைப் பிரிக்க நேரிடும் போது, அக் கல்வெட்டுகளுக்குப் பிரதி யெடுத் துக் கொண்டு, திருப்பணி முடிந்த பின்பு உரிய இடங் களில் அவற்றை வரைந்துவிடுவது வழக்கம். இது 'கற் படிமாற்று' அல்லது படியெடுத்தல்' எனப்படும். நம் சோழனது 20-ஆம் ஆண்டில், சீயமங்கலக் கோயில் கற்றளியாகச் செய்யப்பட்ட போது கற்படி மாற்றுச் செய்யப்பட்டது என்று தெரிகிறது. இவ்வாறே, அக்கல் வெட்டுக்களின் படி முன்னோர் அமைத்த அறங்கள் ஒழுங்காக நடைபெற்றுவரவும் மிக்க கவனம் செலுத்தி வரப்பட்டது. நம் சோழனது 37-ஆம் ஆண்டில், திருப்புலிவனங் கோயிலுக்குப் பழமையாக நடந்துவந்த உற்சவங்களையும் திருநந்தா விளக்குக்களையும் பழைய கல்வெட்டுக்களின் படி மகாசபையோர் நடத்தியதையும், அவற்றுள் திருவிளக்குக்கள் பல்லவ வேந்தனான அபராஜி