________________
80 மூன்றாம் குலோத்துங்க சோழன் கொள்ளலாகும். இந்தச் சிறப்புப் பெயர் மதுராவி ஐ யத்தில் இவன் தரித்ததென்பது முன்னரே விளக்கப் பட்டது. இது திரிபுவன வீரசோழதேவன், திரிபுவன சோழதேவன், திரிபுவன தேவன் என்றும் பயில்கிறது. அம் மதுரை வெற்றியில், முடித்தலை கொண்ட பெரு மாள் என்ற பெயரும் இவனுக்குக் கிடைத்தது என்று தெரியவருகிறது. கோனேரின்மை கொண்டான் என்ற தொரு நாமமும் பிரபலமாக இவனுக்கு வழங்கியதே. 1. கோனேரின்மை கொண்டான் வீரராஜேந்திரன் திரி புவன வீரதேவன் என்பது இவன் சாஸனம். இஃது இவன் முன்னோனான முதல் வீரராஜேந்திரனுக்கு வழங் கிய தாதலால், அவனுடைய அப்பெயர்கள் இரண்டை யும் இவனும் கொண்டனன் போலும். இவையன்றி, உலகுடைய நாயனார், உலகுடைய பெருமாள், உலகுய்யவந்த நாயனார், இராசராசாக்கள் தம்பிரான், இராசாக்கணாயன் என்றும் இவனைச் சாஸனங்கள் வழங்கும். இவற்றுள் பின்னவை இரண்டின் பெயரால் இராஜாக்கள் தம்பிரான் திருவீதி,' இராசாக்கணாயன் திருவிழா' என்று வீதியும் விழாவும் பெயர் பெற்றுள்ளன. இதனோடு, தனிநாயகன் என்ற பெயரும் இவனுக்கு உண்டு. இவையன்றி, தியாக விநோதன் என்ற சிறப்புப் பெயரும் நம் சோழன் பெற்றிருந்தான். இது, தியாக விநோத மூவேந்தவேளான் தியாக விநோதன், தியாகவிநோதப்பட்டன் என்று இவன் காலத்து மக்களும், தியாகவிநோத நல்லூர், தியாக விநோதன் ஆற்றூர், தியாகவிநோத திருமடம் என்று ஊர்களும் மடமும் பெயர் பெற்றிருத்தலால் வெளி யாகின்றது. இச் சோழனது ஆட்சிக்கு முன்பு வழங்கா மல், இவன் காலத்திலேயே தியாகவிநோதப் பெயர்