பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நாட்டுச் செய்திகளும் வழக்குகளும் 81 மிகுதியும் பயின் றிருத்தல் குறிப்பிடத் தக்கது. தியாக சமுத்திரம் என்று விக்கிரம சோழனும், தியாகமேகம் என்று இராஜராஜனும் வழங்கப் பெற்றது போலவே நம் குலோத்துங்கனும் தியாக விநோதன் எனக் கூறப் பட்டான் என்பதே நன்கு பொருந்தும். ஆகவே திரி புவன வீரனான இச் சோழனையே 'சென்னிநாட் டெரியல் வீரன் தியாக விநோதன்' என்று கம்பநாடர் தம் பெருங் காப்பியத்தில் குறிப்பிடலாயினர் என்க. சென்னி போரமலன்' என அப்புலவர் பெருமானே 'அமலன்' என்ற பெயராலும் இச்சோழனைக் கூறுவர். அகளகன், அனங்கன் என்று சோழ முன்னோர் பெயர் பெற்றவாறே, ' அமலன்' என்று இக் குலோத்துங்கன் பெயர் பெற்றனன் போலும். இவற்றால், 40 வருஷ ஆட்சியில் நம் வேந்தன் தரித்த சிறப்புப் பெயர்கள் பல என்பது தெரியலாம். 16. முன்னவரான அரசர் அரசியரை நாட்டார் வழங்கியுள்ள முறை :- இறந்த தந்தை, பாட்டன், முன்னோன் - இவரைப் பெரிய தேவர்' என்பது அக்கால வழக்கு. நாட்டவரெல்லாரும் தங்கள் அரசனைத் தேவர், பெருமாள், நாயனார் என்றும், அவன் தேவியை நம்பி ராட்டியார் என்றும் பெரும்பாலும் வழங்குவர். அத் தேவியரும், அரசகுலத்துப் பெண் மக்களும் ஆழ்வார், நாச்சியார்' என்று வழங்கப்படுவதுமுண்டு. 17. தலைவர்களுக்கு வழங்கிய சிறப்புப் பெயர் கள் :- மேலே பலவிடங்களிலும் கூறப்பட்ட அரசியல் அதிகாரிகளுக்கும், நாட்டுத் தலைவர்களுக்கும், மற்றத் தலைமக்களுக்கும் வழங்கிய பெயர்களை நோக்குமிடத்து, அவர் தம்முடைய இயற்பெயர்களுடன், தாம் இன்ன அரசனது அபிமானத்திற்கு உரியவர் என்பது தெரியும் படி, அவ்வரசன் பெயர்களுள் ஒன்றையும், ஊர் வமிசங்