உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நாட்டுச் செய்திகளும் வழக்குகளும் 83 அத் தலைவர்கள் பெயர்களினின்று தெரியவருகின்றன. தமிழகத்திற்குப் புறம்பான வடுகு கன்னட நாட்டுத் தலைவர்களும் அரசர்களும் தமிழியற்பெயர், சிறப்புப் பெயர்களைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது. 18. வலங்கை இடங்கைப் பிரிவினர் :- இப் பிரிவினர் எக்காலத்தில் உண்டாயினர், எப்படி ஏற் பட்டனர் என்று உறுதியாகச் சொல்லப் போதுமான ஆதாரமில்லை. இடங்கைப் பிரிவினரைப் பற்றி நம் மன்னன் காலத்துக் கல்வெட்டு ஒன்று சில முக்கியமான செய்திகளை வெளியிடுகின்றது. அஃதாவது : முற்காலத்தில், காசியப முனிவரின் யாகத்தைக் காப்பாற்றும் பொருட்டு நெருப்புக் குண்டத்திலிருந்து பிறந்தவர்கள் இடங்கை வகுப்பினர். அரிந்தம சோழன் அரசு புரியுங் காலத்தில் ஒரு பெரும் பிராமணக் கூட்டமும் அவர்களுடன் இவ்வகுப்பினரும் சோழதேசத்தில் குடியேறினார்கள். சுமார் கி. பி. 1128-ல் திருச்சி ஜில்லாவிலிருந்த இவர்கள், தாங்கள் ஒரே இனத்தவரென்றும், தங்கள் சுய வுரிமைகளைக் காப்பாற்ற ஒத்துழைக்க வேண்டுமென்றும், தங்களுக்குப் பரம்பரையாக ஏற்பட்ட விருது மரியாதைகளைக் காட்டாதவர்களைத் தம் விரோதிகளாகவே கருத வேண்டுமென்றும் உடன்படிக்கை செய்துகொண் டார்கள். இச் சமூகத்தைச் சேர்ந்தவர்களே 'சுருதி மான்கள்' என்போர். மேற்கூறிய ஒழுங்குகளை மீறி நடப்பவர்கள் ஜாதி பஹிஷ்காரம் செய்யப்படுவார்கள் என்பதும் அவர் தீர்மானம். ஆடுதுறையில் கண் டெடுக்கப்பட்ட மற்றொரு சாஸனத்தால் இக் கூட்டத்தார் 98 உட்பிரிவினராவர் என்றும், இவர் களுக்கும் மற்றப் பிரிவினர்களுக்கும் அடிக்கடி சச்சரவு கடந்து வந்ததென்றும் தெரியவருகிறது.