உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அத்தியாயம் 10 அரசியல் சோழ ஏகாதிபத்தியம் :- தமிழகத்தில் பேரரசர் களாய் ஆண்டவர்களைக் 'கோ' என்ற சொல்லால் முன்னோர் வழங்கிவந்தனர். கோப்பெருஞ்சோழன், கோ நெடுமாறன் என்ற பெயர்களைக் காண்க. மன்னர் பலருக்குத் தலைவனான சக்ரவர்த்தி என்பது இதன் பொருள். ' கோக்கண்டு மன்னர் குரைகடற்புக்கிலர், என இதே கருத்தில் பாடப்பட்டிருத்தல் காணலாம். தமிழ் நாடுகளிலும் அதனைச் சூழ்ந்த தெலுங்கு கன்னட தேசங்களிலும், தங்கள் தனியாணை செல்லும் படி சக்கராதிபத்தியத்தை நிலைநாட்டிய தமிழ்க் கோ வேந்தர்களுள் விஜயாலயன் வமிசத்துச் சோழமன்னரே தலைமை வாய்ந்தவர்கள். இவர்களது ஏகாதிபத்தியம், முதலாம் இராஜராஜன் காலத்திலிருந்து, வடக்கே கலிங்கமும் தெற்கே கன்னியாகுமரியும் கிழக்கும் மேற் கும் கடல்களும் எல்லைகளாகப் பெருகியது. இந்தச் சாம்ராஜ்யத்தின் தனிநாயகம் வகித்த அரசர் பெரு மக்களை இராஜகேசரி வர்மன், பரகேசரி வர்மன் என்ற பட்டங்களுடன் 'கோ' என்றதைச் சேர்த்து, கோ ராஜகேசரி வர்மன், கோப் பரகேசரி வர்மன் என்று முன்னோர் வழங்கிவந்தனர். தந்தை ராஜகேசரி யாயின், மகன் பரகேசரி என்னும் பட்டம் உடையவனாவான் என்னுஞ் செய்தி முன்பே கூறப்பட்டுள்ளது. நாடுகள் :- இத்தகைய சோழசக்கரவர்த்திகளால் பரிபாலிக்கப்பட்டு வந்த ஏகாதிபத்தியம் பல மண்டலங் களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. சோணாடு, பாண்டிய நாடு, மலைநாடு, கொங்குநாடு, தொண்டைநாடு, கங்க