உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

87 அரசியல் அரசன் திருவாய் மலர்ந்தருளும் ஆணைகளைக் கேட்டு எழுதியும், இன்னின்ன காலத்து இன்னின்ன நடத்தற் குரியன என்பதை அவனுக்கு நினைவூட்டியும், அவனால் நடத்தற்குரிய காரியங்களை நிர்வகித்துப் பார்த்தும் அவ னது 'அந்தரங்கக் காரிய தரிசி'யின் ஸ்தானத்திலிருக் தவன். முறையிடத்திரு மந்திர வோலையான் முன்வணங்கி முழுவதும் வேந்தர்தம் திரையிடப்புற நின்றனர் என்றலும் செய்த நோக்கில்வந் தெய்தி நெருக்கவே என்று, தம்மரசனான அபயன் காலத்தில் இவ்வதிகாரி நடத்திய காரிய முறையைச் செயங்கொண்டாரும் கூறு தல் காணலாம். நம் சோழர் பெருமான்கீழ் இவ்வுத்தி யோகம் வகித்தவர்களுள் முக்கியமானவர் பின்வரு வோர் : இராஜ நாராயண மூவேந்த வேளான், மீனவன் மூவேந்த வேளான், நெறியுடைச் சோழ மூவேந்த வேளான். இனி, அரசரிடமிருந்து பிறக்குங் கட்டளைகளை அவரவர்க்கு அனுப்பி உத்தரவிடுந் தலைவன் 'விடையில திகாரி' ஆவான். வாங்கப்பட்ட அரசிறை முதலிய வருவாய்களையும் செலவுகளையும் ஒழுங்காக வைப்பித்து மேற்பார்ப்போர் 'வரியிலார்' எனப்படு வர். அரசிறை முதலியன விதித்துத் திட்டஞ் செய்யும் அதிகாரிகள் 'வரிக்குக் கூறு செய்வார்' ஆவர். இவர் களன்றி, அரசிறை நீங்கிய ஊர்களின் கணக்குகளை மேற் பார்க்கும் புரவரிச்சீகரண நாயகமும், குத்தகை நிலங்