உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

88 மூன்றாம் குலோத்துங்க சோழன் களின் கணக்கு வைக்கும் வரிப்பொத்தக' அதிகாரி யும், நாட்டின் நிலைமைகளை ஆராய்ந்து ஒழுங்கு செய் யும் நாட்டதிகாரிகளும், அரசிறைகள் தண்டுவதை மேற் பார்க்கும் தண்டுவா'னும் இருந்தனர் என்பது நம் சோழன் சாஸனங்களால் தெரிய வருகின்றது. இவ்வர சியல் துறைகளுக்கெல்லாம் நம் அரசன் கீழ் அதிகாரி களாயிருந்தவர்கள் பலர். அவருள் களப்பாளராசர் வாணாதிராசர் தொண்டைமான் வேசாலிப்பேரரையர் நுளம்பாதிராசர் காடுவெட்டிகள் விழுப்பாதிராசர் கொங்கராயர் நந்தியராசர் சித்தரசர் வயிராதிராசர் விழிஞத்தரையர் முதலியோர் , இவன் காலத்துக் கல்வெட்டுக்களில் அடிக்கடி பிரஸ்தாபிக்கப்படுகின்றனர். இவருள் பலர் உடன் கூட்டத்துப் பெருமக்களாகவும் விளங்கியவர்கள் எனத் தோன்றுகின்றது. நாட்டுத் தலைவர்களான சாமந்தர்கள் சிலரும் இவ்வுடன் கூட்டத்தவர்களிற் சேர்ந்தவர்களே. அரசனிடம் குறையோ, முறையோ, உரிமைகளோ பெற வேண்டியவர்கள் தங்கள் வேண்டுகோளை முதலில் இவ்வதிகாரிகளுள் ஒருவரிடம் அறிவிப்பர். அறிவித்த வற்றை விசாரித்து, அரசன் ஆணைபெறுவது அவசிய மானால், அவ்வதிகாரியே அவ்வரசனிடம் நேரில் விண்ணப்பம் செய்வார். அதனைக் கேட்ட வேந்தன் காரியத்துக்கேற்றபடி உடன்கூட்டத்தவரோடு கலந்தோ தனியாகவோ முடிவுசெய்து, தன் ஆணையை வரிக் கூறு செய்வார் முதலிய அதிகாரிகளுக்கு வாய்