பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

90 மூன்றாம் குலோத்துங்க சோழன் நிலவரித் திட்டஞ்செய்தும் பூமிகள் உதவியும் பிறர் அளித்த நிலங்களையும் பொருள்களையும் ஏற்றுக் கண் காணித்தும் திருப்பணிகள் பல புரிவித்தும் இராஜத் துரோகம் சிவத்துரோகம் களவு முதலியவற்றுக்குத் தண்டம் விதித்தும் பொதுக் காரியங்களைத் திறமை யுடனும் சிரத்தையுடனும் நிர்வகித்து வந்த செய்தி களைக் கல்வெட்டுக்கள் மூலம் பரக்கக் காணலாம். இம் மகா சபையேயன்றி, நாட்டாரும் நகரத்தாரும் திரண்டு சபை கூடிக் கொலை களவு முதலிய குற்றங்களை ஆராய்ந்து உரிய தண்டனைகளை விதிப்பதும் உண்டு. இத் தகைய மகாசபைக்கு அங்கத்தினரைத் தேர்ந்தெடுப் பதில் இருந்த பழைய விதிகளை நம் வேந்தன் சில நகரங் களில் திருத்தி யமைத்துள்ளான். இச் சோழனது ஏழாவது ஆட்சியாண்டில் உண்டான தலைநாயிறுக்கல் வெட்டில் இக் கூட்டத்தாரின் விதிகளாகக் காணும் விஷயங்களாவன : 1. இவ்வாண்டு முதல் சபைக்கூட்டத்துக்கு அங்கத்தினர்களாகத் தேர்ந்து எடுக்கப்படு வோர், அத் தேர்தலுக்கு முன் பத்து வருடங்கள் அக்கூட்டத்தின் அங்கத்தினராய் இருந்திருக்கக்கூடாது. வித்வான்களாயும், சமபுத்தி உள்ளவர்கள் ளாயும், நாற்பது வயதுக்கு மேற்பட்டவர் களாயும் உள்ளவர்களே தேர்தலுக்கு உரிய வர்கள். இந்த ஏழாம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் ஐந்து வருடங்கள் வரை, கூட்டத்து அங்கத் தினர்களின் உறவினர்களும் தேர்தலுக்கு உரிமையில்லாதவர்கள்.