உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அரசியல் 91 4. அரசிறை முதலிய கடமைகளைச் சரிவரச் செலுத்தாதவர்களும், இலஞ்சம் வாங்கின வர்களும், மற்ற வினைக்கேடு உள்ளவர்களும் சபை அங்கத்தினராய் இருக்க உரிமை யற்றவர்கள் என்பன. இம் மகாசபை அங்கத்தினரான பட்டர்கள் (வித்வான்கள்) நம் சோழன் காலத்தில் தம்மிற் கூடிச் செய்த குற்றத் தீர்ப்புக்கள் சில இங்கே குறிப்பிடத் தக்கவை : ஒரு சமயம் இருவர் தங்கள் வயலில் ஒரு எருமை மாடு பயிர்களை மேய்வது கண்டு அதை நன்றாய் அடித்தார்கள். அதனால் எருமை இறந்து விட்டது. அச் செய்தியை அவர்கள் பட்டர் களுக்குத் தெரிவிக்க, பட்டர்கள், பக்கத்தில் இருக்கும் கோயிலுக்கு ஒரு தீபம் கொடுக்கும்படி சொல்ல, அவர்கள் அப்படியே செய்தார்கள். இனி, தேவாலயம் முதலியவற்றின் சொத்துரிமை பற்றி நேரும் பெரிய வழக்குக்களை அரசன் தன் உடன்கூட்டத்து அதிகாரிகளைக்கொண்டு விசாரிக்கச் செய்வதும், அவர்களது விசாரணை முடிவைப் பெரும்பாலும் அனுமதித்து உறுதி செய்வதும் வழக்கமாகும். உதாரணமாக: நம் வேந்தனது 15-ஆம் ஆண்டில், திருவாவடு துறைக் கோயிலார்க்கும் திருவாலங்காட்டுக் கோயி லார்க்கும் தோட்டக் கூறான நிலங்கள் சிலவற்றின் உரிமைபற்றி விவாதம் நேர்ந்தபோது, அதனைத் தீர்த்துவைக்கும்படி நம் அரசனிடம் கொங்கராயர் என்பவர் வேண்டிக்கொண்டார். அரசன் தன் 1077-7