பக்கம்:மூன்று தலைமுறை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

弱 மூன்று தலைமுறை

கினேத்துக் கொள்ளாதே. அதற்கும் ஒரு காரணம்

பால்வண்ண துரை சிங்கார புருஷர். ஆடை ஆபர னங்களில் அதிகக் கவனம் செலுத்துபவர், ஆள் நல்ல தங்கமேனியாக இருப்பார். எப்போதும் சிரித்த முகம். அன்றன்று புதுச் சலவை ஆடைகளேத்தான் உடுப்பார். அதில் ஒர் அப்பு அழுக்கு இருக்கக்கூடாது. ஒருமுறை உடுத்த ஆடையைச் சலவை செய்யாமல் மறுமுறை உடுக்கமாட்டார். வெளியிலே போய்வங்தால் உடனே உடைகளே மாற்றிக் கொள்வார். எல்லாம் சுத்தமான வெள்ளே ஆடை பால்போல வெள்ளே யாடைகளே உடுத்து வந்தமையால் அவருக்குப் பாலாடைத்துரை என்று பேர் வந்தது.

அந்தப் பேரை யார் முதல் முதல் வைத்தார் தெரி யுமா ? யாரோ தமிழ்ப் புலவர் ஜமீன்தாரைப் பார்க்க வந்தாராம். அவருடைய துரய வெண்மையான ஆடை களைக் கண்டு, "நீங்கள் பால்வண்ணதுரை, உங்கள் ஆடையும் பாலாடையாக இருக்கிறது' என்று சிலேடை யாகப் பேசினராம். அதுமுதல் பாலாடைத்துரை என்று எல்லோரும் சொல்ல ஆரம்பித்தார்கள்.

பாலாடைத்துரைக்குத் தினந்தினம் புதிய சலவைத் துணிகள் வேண்டுமானுல், இந்த ஜமீனில் வண்ணுர் களுக்கு வேலே அதிகம் இருப்பது இயற்கை அல்லவா ? ஜமீன்தார் மாத்திரம் அல்ல, அரண்மனேயில் உள்ள அவருடைய உறவினர்களும் தங்கள் ஆடையை மாசு மறுவின்றி வைத்துக் கொள்ளப் பிரயாசைப் பட்டார்கள். ஜமீனில் வேலே செய்யும் உத்தியோகஸ்தர்களும் சலவைத் துணிகளேயே அரண்மனைக்கு வரும்போது உடுத்துவார் கள். அரண்மனையென்று ஜமீன்தார் மாளிகையைச் சொல்வது வழக்கம். இப்படிப் பலருக்கும் சலவை செய்யவேண்டியிருந்ததால் சலவைக்காரர்களுக்கு இடை விடாத வேலை இருந்தது. . துரைக்கு மாத்திரம் சலவை செய்ய ஒரு தனிக் குடும் பமே இருந்தது. அந்தக் குடும்பத்தில் ஏகாம்பரம் என்ற வண்ணனும் அவனுடைய தாயும் வேறு சிலரும் இருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/11&oldid=620398" இலிருந்து மீள்விக்கப்பட்டது