பக்கம்:மூன்று தலைமுறை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று தலைமுறை 7.

தார்கள். அவ்வளவு பேரும் துரையின் ஆடைகளேத் தவிர வேறு யாருடைய கூடைகள்ேயும் வெளுப்பதில்லை. அந்தக் குடும்பத்திற்கு அரண்மனையிலிருந்து தனியே மானியம் விட்டிருந்தார்கள். பாலாடைத்துரை தம் காலத்தில் ஒரு கிலத்தை அவர்களுக்கு அளித்தார். அதுமாத்திரமா?அடிக் கடி துரை அளிக்கும் இளும் வேறு ஏகாம்பரத்துக்குக் கிடைக்கும். இவ்வளவும் கிடைக்கும்போது அவர்களுக்கு என்ன குறை இருக்கப்போகிறது?வேறுயாருக்கும்வெளுக்க வேண்டிய அவசியமே அவர்களுக்கு ஏற்படவில்லை.

ஏகாம்பாத்துக்கு அப்போது இருபது வயக இருக் கும். கல்யாணம் ஆகவில்லே. அவனுடைய உறவிலே எத்தனையோ பெண்கள் இருந்தார்கள். இருந்தாலும் யாரிடத்திலும் அவன் மனசு மேவவில்லை. ஆள், பார்ப் பதற்கு அழகாக இருப்பவன்; தோள்களெல்லாம் எவ்வளவு உயரமாக இருக்கும் பரந்த மார்பு. அவன் வண்ணுகைப் பிறக்காமல் ராஜாவாகப் பிறந்திருந்தர் ல் ஆயிரம் ராஜகுமாரிகள் அவன் அழகில் சொக்கிப் போயிருப்பார்கள், இப்போதுதான் என்ன ? அவனேக் கல்யாணம் பண்ணிக்கொள்ள அவனுக்குச் சொந்தமான பெண்களெல்லாம் ஆசைப்படத்தான் பட்டார்கள். அவன் இசையவில்லே. பாவி சொந்த மாமன் மகளேத் தான் கல்யாணம் பண்ணிக் கொண்டான ?

நீ சொன்னயே, அந்தக் கோழிப்பேட்டையிலிருந்து ஒருத்தன் ஒருநாள் ஏகாம்ப்ரத்தின் வீட்டுக்கு வந்தான். ஆள் பேச்சில் வல்லவகை இருந்தான். மகா வாயாடி. சனியன் மாதிரி வந்து சேர்ந்தான். அவனைச் சொல்லி என்ன பிரயோசனம் ? விதி யாரை விட்டது

அவன் வந்தான வந்து என்ன என்னவோ சமா சாரமெல்லாம் பேசிக்கொண்டிருந்தான். கமலபுரம் ஜமீன்தார் பெண்ணை, இந்த ஊர் ஜமீன்தாருக்குக் கொடுக்க ஏற்பாடு ஆவதாக அவன் ஊரிலே வதந்தி, இருந்ததாம். அதை அவன் சொன்னன். அந்த ஜமீன் பெருமைகளே அளந்தான். பிறகு, "மச்சான், மச்சான், நீ இந்த ராஜாவுக்குப் பிரியமானவகை இருக்கிருங். இவருக்கு எங்கள் ஜமீனிலே கல்யாணம் ஆகப்போகிறதே;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/12&oldid=620400" இலிருந்து மீள்விக்கப்பட்டது