பக்கம்:மூன்று தலைமுறை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று தலைமுறை 9.

திறமையும் அவள் மனசைக் கவர்ந்தன. துடிதுடிப்பாக இருந்தாள் அவள். ஏகாம்பரத்தின் தாய்க்கு அவ நன்ருகப் பிடித்துவிட்டது.

ஊருக்கு வந்து ஏகாம்பரத்தினிடம், 'பிள்ளே நல்லா இருக்குது. ராசாத்திமாதிரி அழகாக இருக்கிருள்' எனருள. r

முருகாயிக்கு வேண்டிய பரிசம் போட்டு ஏகாம் பரம் அவளேக் கல்யாணம் பண்ணிக் கொண்டான். இந்த ஊர் ஜமீன்தார் அவனுக்குக் கல்யாணத்துக்கு என்ன என்னவோ இனும் கொடுத்தார். வெள்ளியா லேயே ஒர் இஸ்திரிப் பெட்டி கொடுத்தாரென்ருல் பார்த் துக் கொள்ளேன். -

முருகாயி வந்தாள். நல்ல வளர்ச்சியை அடைந்த பெண். சாசாத்தி மாதிரிதான் இருந்தாள். இந்த வீட் டிலே நானும் எத்தனேயோ பெண்களேப் பார்த்திருக் கிறேன். அவளேப் போல அழகாக யாரையும் நான் பார்த்ததில்லை. ஏகாம்பரத்துக்கும் அவளுக்கும் நல்ல பொருத்தம். ராஜா ராணிபோல இருந்தார்கள்.

ஜமீன்தாருக்குக் கல்யாணம் இன்னும் ஆகவில்லை. தள்ளிக்கொண்டே போயிற்று. சீதன விஷயத்தில் ஏதோ கசமுசல் ஏற்பட்டது. ஊரில் என்ன என்னவோ பேசிக் கொண்டார்கள். ஜமீன்தாருக்கும் அந்தப் பெண்ணுக்கும் மனசு ஒத்துப் போனதாகச் சொன்னர்கள். பாலாடைத் துரை அந்தப் பெண்ணேக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்று தீவிரமாக இருப்பதைக் கமலபுரம் ஜமீன் தார் உணர்ந்துகொண்டார்.அவர் பெரிய செலவாளி.முரட் டுத் தடியர்களே யெல்லாம் சோறுபோட்டு வளர்த்து மல் யுத்தம் பண்ணச் செய்து பார்ப்பதிலே அவருக்கு ஆசை யாம். இந்தக் கல்யாணத்திலே பெருத்த லாபம் அடைந்து விடவேண்டும் என்று ஆசைப்பட்டார். அவருக்குக் கடன் இருந்தது. அந்தக் கடனே இவர் தீர்த்தால்தான் தம் பெண்ணைக் கொடுப்பதாக அவர் சொல்லிவிட்டாராம்.

ஏகாம்புரம் ஒருநாள் தன் பெண்டாட்டியிடம் பேசி னது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. ' ஏ முருகாயி, ஜமீன்தார் துரையைக் காட்டிலும் கான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/14&oldid=620404" இலிருந்து மீள்விக்கப்பட்டது