பக்கம்:மூன்று தலைமுறை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று தலைமுறை 11

மாதிரியா இருக்கிருள் யாரே ஜமீன்தார் வீட்டுப் பெண்ணேப் போல அல்லவா இருக்கிருள் ' என்று வியப் புற்ருர்கள்.

' அழகைக் கடவுள் கொடுத்திருக்கிருர், அலங் காரத்தைக் கட்டிக் கொண்டவன் செய்திருக்கிருன்” என்ருர் சிலர். "ஆமாம் என்ன இருந்தாலும் அந்த அதே கிலேக்குத் தகுந்தபடி இருக்கவேண்டாமா? புனுகு இனமாகக் கிடைத்ததென்ருல் கால் கையெல்லாம் பூசிக் கொள்வதா கொஞ்சமும் அடக்கம் இல்லாமல் இப்படித் தலே கீழாக சிற்பது தகாது ' என்று சில பொருமைப் பிண்டங்கள் சொல்லிக் கொண்டார்கள்.

'உனக்கு இந்த விஷயமெல்லாம் எப்படித் தெரியும்' என்று கேட்கலாம் தம்பி. அவர்கள் இரண்டு பேரும் கூடிக் குலாவிப் பேசும்போது இத்தனை சங்கதிகளும் இந்த இடத்தில் அடிபட்டுப் போகுமே. அவர்கள் ரகசியமாகப் பேசிக்கொண்டாலும் எனக்குத் தெரியாமல் இருக்குமா ? நான்தான் அவர்கள் ரகசியத்தைப் பிறர் அறியாதபடி குறுக்கே கின்றேன். நான் அறியாமல் எப்படி இருக்க முடியும் ?

ஏகாம்பரம் மாமனர் விட்டில் தங்கியிருந்தபோது

ஊர் முழுவதும் அவனேப் பற்றியும் அவன் மனேவியைப் பற்றியுமே பேச்சாக இருக்கது. எந்தப் பாவியோ கண் போட்டிருக்கவேண்டும். இல்லாவிட்டால் அடுத்த வரு ஷம் அவர்கள் கிலே இப்படி ஆகுமா ?

"அண்ணே, என்ன இப்படி அடிக்கடி அங்கலாய்க் கிருயே! கதையை மாத்திரம் சொல்லேன்.”

' வயசாகி விட்டதோ இல்லையோ ! அப்படித்தான் இருக்கும். ஆனலும் கவனமாய்க் கேள் தம்பி.”

6) காம்பரம் மாமனர் விட்டுக்குப் போயிருந்தானே, அப்போது ஒரு சங்கதி கடந்தது. கோழிப்பேட்டைக்கும் கமல புரத்துக்கும் ஒரு நாழிகை வழிதாளுமே முருகாயி யின் அம்மாவுக்கு அந்தக் கமலபுரத்து ஜமீன்தார் மகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/16&oldid=620408" இலிருந்து மீள்விக்கப்பட்டது