பக்கம்:மூன்று தலைமுறை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 மூன்று தலைமுறை

பழக்கம். அவர்களுக்குச் சலவை செய்கிறவள் அவள். அந்தப் பெண்ணேத்தான் பாலாடைத்துரைக்குக் கேட் டிருந்தார்கள். தன் மகளும் மருமகனும் வீட்டுக்கு வந்திருக்கிறபோது விருந்து வேடிக்கையெல்லாம் கடக்க வேண்டாமா ? பொறுப்புடன் கவனிக்கவேண்டியது அவள் கடமையல்லவா ? விருந்து ஏற்பாடுகளில் ஈடுபட் டிருந்தபோது, ஒருநாள் அவள் கமலபுரம் ஜமீன்தார் வீட்டுக்குப் போகவில்லை. மறுநாள் போனபோது அந்த ஜமீன்தார் பெண் கேட்டாளாம், ஏன் வரவில்லேயென்று. இவள். தன் மகளும் மருமகனும் வந்திருக்கிற விஷயத் தைச் சொன்னுள். -

'மாப்பிள்ளை எந்த ஊர் ? என்று கேட்டாள்

ஜமீன்தார் பெண். -

' என்ன அம்மா புதிதாய்க் கேட்கிறீர்கள் : கல் யானத்துக்குப் பாக்கு வெற்றிலேயெல்லாம் வைத் தோம். அதற்குள் மறந்து போய்விட்டீர்களா? மாப் பிள்ளே குமாரபுரம் ஜமீன். ஜமீன் துரைக்கு வேண் டியவர்.”

ஜமீன்துரைக்கு வேண்டியவர் என்று பெருமையாக இவன் சொல்விக்கொண்டது ஜமீன்தான் மகளுக்குப் பிடிக்கவில்லே.

' ஜமீன்தாரும் உன் மருமகனும் கைகோத்துக் கொண்டு விளையாடுவார்களோ ? வேண்டியவர் என்று ஐம்பமாய்ச் சொல்கிருயே t' என்று கேட்டாள் ஜமீன் தாா மகள.

" அப்படி இல்லே அம்மா : ஒர் ஆபத்து சம்பத்தென்

ருல், இவன் நமக்குச் சலவை செய்கிறவன்தானே என்று என்ணுமல், பிரியத்தோடு துரை கவனிப்பாராம். அதனல் தான் அப்படிச் சொன்னேன் அம்மா என்று பணிவாகச் சொன்னுள் முருகாயியின் தாய். - - -- ': அது சரி. உன் மகளைச் சரியாக வைத்துக் கொண்

டிருக்கிருன?” -

கண்ணிலே வைத்து இமையிலே மூடுகிருர் 1 எத் தன புடைவை 1 எத்தனை நகை !”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/17&oldid=620411" இலிருந்து மீள்விக்கப்பட்டது