பக்கம்:மூன்று தலைமுறை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று தலைமுறை 13

" அப்படியா! உன் மகளே இங்கே அழைத்துவாயேன். எப்படி இருக்கிருளென்று பார்க்கிறேன்.”

தான் போய் வாழ இருக்கும் ஊரைப்பற்றி விசாரிக்க வேண்டுமென்பது அவளுடைய ஆசை. நாளேக்கு நீ வரும் போது, அழைத்துக்கொண்டு வா. அவன் சம்மதிப்பான் அல்லவா?’ என்று சிரித்தபடியே கேட்டாள்.

“என்ன அம்மா, அப்படிக் கேட்கிறீர்கள்! உங்கள் வீட்டுச் சோற்றைத் தின்று வளர்ந்த குழந்தை அவள், அவள் உங்களே வந்து பார்ப்பதற்கு யாருடைய உத்தரவு வேண்டும்?”

மறுநாள் முருகாயியை அழைத்துக்கொண்டு அவ ளுடைய தாய் ஜமீன்தார் வீட்டுக்குப் போளுள். அந்தப் பெண்-அவள் பேர் என்னவோ சொல்வார்களேஆமாம், கமலம், கமலம் என்று சொல்வார்கள்-அவள் முருகாயியைக் கண்டவுடன் ஆச்சரியப்பட்டுப் போனள், அவளுடைய கொண்டையையும் ஆடை ஆபரணங்களே யும் ஒய்யார நடையையும் பார்த்து, அடேயப்பா! இவள் மகா ராங்கிக்காரியாக இருப்பாள் போல் இருக்கிறதே? என்று எண்ணினுளாம். குமாரபுரத்துக்கு வந்து சில வாரங்களே ஆகியிருந்தாலும் அந்த ஊரைப்பற்றின சமாசாரம் எல்லாம் முருகாயி தெரிந்துகொண்டிருந்தாள். அத்தனையும் அவள் கமலம்மாவிடம் ஒப்பித்தான்.

கமலம் எல்லாவற்றையும் பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்தாள். இந்தக் குமாரபுரம் பெரிய ஊரென் றும், கடைத்தெரு, அரண்மனைத் தெரு, கோவில் தெரு என்று பல தெருக்களே உடையதென்றும் என்ன் என்னவோ சொன்னுள் முருகாயி. கமலம்மாவுக்கு அந்தத் தெருக்களேப் பற்றி என்ன கவலே “அதெல்லாம் சரி; ஜமீன்த்ாரைப் பற்றி ஏதாவது தெரியுமா? தெரிங் தால் சொல்” என்று காணத்துடனே கேட்டாள். முரு காயியாகச் சொல்லட்டும் என்று அவள் எதிர்பார்த்தாள். அவள் சொல்லவில்லை. ஆகவே, வாய்விட்டே கேட்டாள். ஒரு பெண்ணினுடைய மனசை மற்ருெரு பெண் தெரிந்துகொள்ளமாட்டாளா? உடனே முருகாயி வரு ணரிக்க ஆரம்பித்துவிட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/18&oldid=620413" இலிருந்து மீள்விக்கப்பட்டது