பக்கம்:மூன்று தலைமுறை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 மூன்று தலைமுறை

'அதென்ன அப்படிக் கேட்கிறீர்களே! நாங்கள் அரண் மனே வேலைக்காரர்கள். லகம் கொடுத்தாலும் இன்னெருத்தருக்குச் சலவை செய்வதென்பது எங்க ளிடம் இல்லை. நாள் தவறிஞலும் எங்கன் வீட்டுக்காரர் துரையைப் பார்க்கத் தவறமாட்டார், அவரை கேரிலே பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆளுலும் துரைக்கு இவர் மேல் தனியான பிரியம். அதனல் இவரை கேரே பார்த்துப் பேசுவார். அந்தத் துரையைப் பற்றி இவர் மூலம் எவ்வளவோ கேட்டிருக்கிறேன். என் கல்யா ணத்தின்போது அவர் எவ்வளவோ இளும் கொடுத் தாராம். எனக்கும் உனக்கும் மாமனர் வீடு ஒரே ஊரடா என்று சொல்லிச் சந்தோஷப்பட்டார்ாம், இவரிடம்'

'அவ்வளவு தாரம் உன் புருஷனுக்கும் அவருக்கும் நெருக்கமான பழக்கம் உண்டா?”

'நெருக்கம் என்ன அம்மா? மனுஷருக்கு மனுஷர் பிரியமாக இருக்கிறதென்பது ஒரு தனிச் சுபாவம். துரை அவர்கள் கலகலப்பாகப் பேசுகிறவராம். எங்கள் டுக்காரரும் குஷியாகப் பேசுகிறவர்.”

'துரையின் சுபாவம் எப்படி?”

'தங்கமானவராம். ஆமாம்: கம்மா உங்களுக்காகச் சொல்லுகிறேனென்று எண்ணுதிர்கள். கிறம் தங்கம் போலத்தான் இருக்குமாம். அன்று ஒரு காள், முழுவதும் சரிகை மயமாக இருந்த வேட்டி ஒன்றை இவர் விசிறி மடிப்பு மடித்து இஸ்திரி போட்டுக்கொண்டிருந்தார். 'தங்கம் மாதிரி பளபளக்கிறதே!’ என்று சொன்னேன். "இதுக்கு மேலே துரை உடம்பு தங்கம் என்று இவர் சொன்னுர்.”

'நீ அவரைப் பார்த்ததில்லையா?” 'கான் எதற்குப் பார்க்கிறேன் அம்மா? இவர்தாம் ஒவ்வொரு நாளும் போகிருரே. எனக்கு அங்கே என்ன வேலை? நீங்கள் வந்தால் எனக்கும் வேலே இருக்கும். இவர் ராஜாவைப் பார்க்கப் போனல், நான் ராணியைப் பார்க்கப் போவேன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/19&oldid=620415" இலிருந்து மீள்விக்கப்பட்டது