பக்கம்:மூன்று தலைமுறை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று தலைமுறை - i5

'போடி, குறும்புக்காரி அதற்குள்ளே நீ ரிச்சயம் பண்ணிவிட்டாயே. அவருக்கு எத்தனையோ பேர் பெண் கொடுக்கக் காத்திருப்பார்கள். நான்தான் வருவே னென்று கிச்சயம் சொல்ல முடியுமா?” -

'இந்தா பாருங்கள்: இனிமேல் ஒரு தரம் அப்படிச் சொல்லிவிடாதீர்கள். உங்கள் கழுத்திலே தாவிச் சரடு ஏறவில்லேயே ஒழிய, மற்றப்படி ங்ேகள்தாம் எங்கள் ஊர் ராணி. கான் அந்த ஊருக்குப் போவதற்குக் கூட நீங்களே காரணம்.”

“அதென்னடி, அது பெரிய புதிர் போடுகிருயே!”

'அதுவா? உங்களுக்கும் துரைக்கும் கல்யாணம் ஆகப் போகிறது என்ற சமாசாரம் ஊருக்கெல்லாம் தெரிகிறதற்கு முன்பே எங்கள் வீட்டுக்காரருக்குத் தெரிந்துவிட்டதாம். அது தெரிந்துதான் இவரும் இந்த ஊரிலே பெண் எடுக்கத் தீர்மானித்தாராம். எங்கள் கல்யாணம் முக்தியே ஆகிவிட்டது. நீங்கள் வரும்போது உங்களுக்கு ஊழியம் செய்ய அங்கே ஒருத்தி தயாராக இருக்க வேண்டாமா? எனக்கு அரண்மனேச் சேவகம் எப்போது கிடைக்குமென்று காத்துக்கொண்டிருக்கிறேன். துரையவர்களும் காத்துக்கொண்டுதான் இருப்பார், சரி, சரி, எப்போது முகூர்த்தம் வைத்திருக்கிருர்கள்?”

'நீ மகா துணிச்சல்காரியாய் இருக்கிருயே! எனக்கு என்ன தெரியும் அதைப்பற்றி?”

"முகூர்த்தம் கடக்காமலா இருக்கப் போகிறது? நீங்கள் குமாரபுரம் ராணியாக வந்துவிட்டால் இந்த ஏழையையும் ஒரு கண் பார்த்துக்கொள்ள வேணும். இவர் அடிக்கடி துரையைப் பார்த்து வங்தேன். அப்படிச் சொன்னர்; இப்படிப் பாராட்டிஞர்' என்று சொல்லிக் கொள்கிருர். கானும், துரைசாணி இப்படிச் சொன்னர் கள்; எனக்கு இந்தச் சேலையைத் தந்தார்கள்’ என்று அவ ருக்கு முன்னே சொல்லிக் காட்ட வேண்டும். இதுதான் என் ஆசை. நீங்கள் இங்கே இருக்கிறபோதும் எங்களுக்கு ராணி, அங்கேயும் எங்கள் ராணி அல்லவா? என் ஆசையை நீங்களும் அந்தக் கடவுளும் நிறைவேற்றி வைக்க வேணும்.” .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/20&oldid=620417" இலிருந்து மீள்விக்கப்பட்டது