பக்கம்:மூன்று தலைமுறை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 மூன்று தலைமுறை

யாக இருந்தால் குறிப்பிட்டு வைத்தியம் செய்யலாம். அஸ்திவாரமே பலம் இல்லாமற் போனுல் பிறகு என்ன செய்வது? ஏதோ நடமாடப் பேசச் சிரிக்க அவளுக்குச் சக்தி இருந்ததே பெரிது.

அந்தப் பைத்தியக்காரப் பெண் தினங்தோறும் முருகாயியை வரவழைத்துப் பேசுகிறது வழக்கமென்று முன்பே சொன்னேனல்லவா ? அப்படி முருகாயி வந்து பேசிக்கொண்டிருந்த சந்தர்ப்பங்களில் ஜமீன்தார் அவ ளேப் பார்த்தார். முதலில் அவள் அழகைப் புறம்பே இருந்துதான் ரசித்தார். ஆளுல் பருவக் கோளாறு அவரை அதோடு கிறுத்தவில்லை. சந்தர்ப்பங்களும் சேர்ந்து கொண்டன. முருகாயியின் கடையுடை பாவனே களே அவர் பார்த்தபோது அவருக்கு அவள் இணக்கமாக இருப்பாள் என்று தோற்றிற்ருே என்னவோ !

ஒருநாள் முருகாயி கமலம்மாவிடம் நெடு நேரம் பேசிக்கொண்டிருந்தாள். பிறகு விடை பெற்றுத் திரும் பினுள். இடையில் ஓரிடத்தில் ஜமீன்தார் அவளைச் சந்தித்தார். 'என்ன முருகாயி, மிகவும் அவசரமோ ?” என்று கேட்டார். . . . . . -

அவள் காணத்துடன், 'இல்லை, எசமான்' என்ருள். 'நேற்று. நான் ஒரு தப்புச் செய்ய இருந்தேன்’ என்று. ஜமீன்தார் புன்னகையுடன் பேசிஞர். முருகா யிக்கு அவர் கூறுவது விளங்கவே இல்லை.

'என்ன யோசிக்கிருய் இந்தப் புடவையைக் கட்டிக்கொண்டு வருவதை கான் கவனித்ததில்லே. நேற்று நீ அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டு கின்ருய், அசப்பில் இந்தப் புடைவையைக் கண்டு அம்மாவாக்குமென்று நினைத்து ஏமாங்தேன். நல்ல வேளே கூப்பிடவில்லை.” - 'அம்மா மாதிரி நான் இளைத்தா இருக்கிறேன்?” என்று இயற்கையாக அவளுக்குள்ள சுதந்தரத் துடுக்கிலே வார்த்தை வெளியாயிற்று. ஆனல் அவள் அடுத்த கணம் காக்கைக் கடித்துக்கொண்டாள். -- ஜமீன்தார் புன்னகை பூத்தார். 'வாஸ்தவங்தான். அம்மா மிகவும் கோஞ்சல்தான். உனக்கும் அவளுக்கும். ஈடுசொல்லலாமா? தளதளவென்று வளர்ந்திருக்கிருய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/31&oldid=620436" இலிருந்து மீள்விக்கப்பட்டது