பக்கம்:மூன்று தலைமுறை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று தலைமுறை 25

இதென்ன, மறதி உனக்குக் கதையைச்சொல்லாமல், அதைப்பற்றி அபிப்பிராயம் சொல்ல வந்துவிட்டேனே!

முருகாயி அரண்மனேக்குப் போய்வரத் தொடங்கி ளுள்.கமலம்மாவுக்கு அவளேக் கண்டாலே உற்சாகம் ஏற் படும். அவளுடைய பேச்சுச் சாமர்த்தியத்திலே ஈடுபட்டு கின்ருள். ஆகவே, தின்ங்தோறும் முருகாயியை வரச் சொல்லுவாள் அழுக்குத் துணி இருக்கிறதோ,இல்லையோ, பேசிக்கொண்டிருக்கலாமென்று அவளே வரும்படி சொல் லுவாள்.

முருகாயி அரண்மனைக்கு என்று போனளோ, அன்று துரதிருஷ்டம் பிடித்தது என்றுதான் சொல்லவேண்டும். பின்னே வரப்போகும் ஆபத்துக்கு விதை அன்று விதைத் தாகிவிட்டது. பார்க்கிற பேர்களுக்கு அவளுக்கு அதிருஷ் டம் மேலும் மேலும் ஓங்கியதென்றுதான் தோன்றியது. அடிக்கடி அவளுக்கு அரண்மனையிலேயே சாப்பாடு கிடைக்கும். ஜமீன்தாரிணி அவளுக்குப் பழம் புடைவை என்ற பேரால், வாங்கி ஒரு வாரம் கட்டிக்கொண்ட உயர்ந்த வேலைப்பாடுள்ள புடைவையைக் கொடுத்தாள். அந்தப் பாவிமகள் அதைப் பெட்டியிலே வைத்துக் கொண்டு பண்டிகை, திருவிழாவுக்குக் கட்டிக் கொண். டாளா ? கஷ்டப்படாமல் வந்தது; ஆகையால் அதன் பெருமை தெரியவில்லையோ, அல்லது அவளுடைய ஆடம் பரத்தின் வேகமோ, அதை உடனே கட்டிக்கொண்டாள். அரண்மனேக்குப் போகும்போதெல்லாம் தவருமல் கட் டிக் கொண்டாள்.

ஜமீன்தார் வரவர அவள் மேல் காட்டம் வைக்கத்

தொடங்கினர். கமலம்மாவுக்குச் சிறு வயசிலிருந்தே தேக பலம் போதாது. மிகவும் கோஞ்சல், ஏதோ வெளுப்புத் தோல்: பொடி, மாவு, மண்ணுங்கட்டி இவைகளைப் பூசிக் கொண்டால் ஒரு பளபளப்பு: அவ்வளவுதான். மாசத்' துக்கு ஒரு தடவை ஜலதோஷமென்றும், தலைவலியென் றும், ஜூர்மென்றும் ஏதாவது வியாதி வந்துகொண்டே இருக்கும். சில சமயங்களில் ஒரு வாரம் இரண்டு வாரம் படுக்கையிலே இருப்பதும் உண்டு. -

பாலாடைத்துரை தக்கவர்க்ளேக் கொண்டு வைத் தியம் செய்து வந்தார். ஏதாவது உருப்படியான வியாதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/30&oldid=620435" இலிருந்து மீள்விக்கப்பட்டது