பக்கம்:மூன்று தலைமுறை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று தலைமுறை 29

மனேக்குப் போயிருந்தால் ஜமீன்தார் கண் அவளே காடி யிருக்குமா ? ஆல்ை, தம்பி, அப்படிச் சொல்வதற்கும் இல்லை. அந்தப் பெண்ணின் ஒவ்வோர் அங்கத்திலும் கடவுள் வளப்பத்தையும் வனப்பையும் வாரி இறைத் திருந்தார். அந்த அழகுதான் அவளுக்குக் கேடாக இருந் தது என்று சொல்லலாம். அதற்காக அவலட்சணமாக இருக்கவேண்டுமா ? எனக்கு எது காரணம் என்று சொல் லத் தெரியவில்லை. அவள் இத்தனே அலங்காரம் இல்லா மல் இருந்திருந்தால் இத்தகைய விபத்துக்கு இடமே இல்லாமல் இருந்திருக்கும் என்ற ஓர் எண்ணம் மாத்திரம் எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது.

நாலு நாள் ஏகாம்பரம் ஜூரமாகக் கிடந்தான். அந்த நாலு நாளும் அவள் என்ன என்னவோ கண்டங் களுக்கெல்லாம் தப்பியிருக்கவேண்டும். அதனலே அவ ளுக்குத் தைரியம் குறைந்த தென்று நான் கினேத்தேன். படுபாவி அவளேக் கடவுள் சாமானிய அச்சில் வார்க்க வில்லே. புலியையும் சிங்கத்தையும் வார்த்த அச்சிலே தான் வார்த்திருக்கவேண்டும். அபாயத்துக்குத் தப்பின புலி, மறுபடி அபாயத்திலே சிக்காமல் பதுங்கவேண்டியது தானே கியாயம் ? அப்படித் தப்பினதே அதன் வெறியை அதிகப்படுத்திப் பின்னும் பெரிய அபாயங்களிலே போய்ப் படும்படி செய்தால் அதை என்னவென்று சொல்வது ?

ஒரு நாள் அவள் சொன்னாள்; எ.காம்பரம் ஜுரத்தி லிருந்து எழுந்தவுடன் ஒருராத்திரி அவள் அவனேடு பேசிக் கொண்டிருந்தபோது, 'மாமா, எனக்கு எங்கள் ஊரிலே போய் இருக்கவேண்டுமென்று ஆசையாக இருக்கிறது. நாம் இருவரும் அந்த ஊ ரு க் கே போய்விடலாமே” என்ருள். w

"இதென்ன யோசனை! இங்கே இருக்கிற செளகரியம் வருமா? உங்கள் ஊரில் எனக்கு என்ன கூலி கிடைக்கும்? அது உனக்கு மல்லிகைப் பூவுக்குக் கூடப்போதாதே' என்று ஏகாம்பரம் பதில் சொன்னன்.

'ஏன்? அங்கேயும் ஜமீன்தார் இருக்கிருர், அவர் வீட்டு வேலே இல்லையா?” என்று கேட்டாள் முருகாயி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/34&oldid=620442" இலிருந்து மீள்விக்கப்பட்டது