பக்கம்:மூன்று தலைமுறை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 மூன்று தலைமுறை

'போயும் போயும் அந்த முரட்டு ஜமீன்தாரிடக்தாளு. வேலே செய்யவேண்டும்? ம்ேமுடைய துரையைப் போல இந்த உலகத்தில் ஒருத்தரைப் பார்க்க முடியுமா?” என். ருன் அவன். -

"ஆமாம்- அவள் பேச்சு ஒடவில்லை. 'உங்கள் துரையைப் பற்றி நீங்கள் இன்னும் தெரிந்துகொள்ள வில்லை’ என்று வேறு ஒருத்தியாக இருந்தால் சொல்வி யிருப்பாள். அவள் முருகாயி ஆயிற்றே: மேலே பேசா மல் இருந்துவிட்டாள். மகா கல் நெஞ்சுக்காரியாக இருக்கவேண்டும் அவள். அந்த கிலேயில் அவளுக்கு இருந்த தைரியத்தை நான் யாரிடமும் பார்த்ததேயில்லை. தன்னு டைய மானத்தைப் பிறர்அறியாமலே, பிறர் உதவி இல்லா மலே, தானே காத்துக் கொள்ளலாம் என்ற உறுதி அவ ளிடம் இருந்தது. இல்லாவிட்டால் அத்தனே உயிருக்கு உயிராகப் பழகிய புருஷனிடம் உண்மையைச் சொல்வி யிருக்கமாட்டாளா? சொல்லியிருந்தால் ஒருவேளை அவன், 'இனி இந்த ஊரிலேயே இருக்கவேண்டாம் என்று அப் போதே ஏற்பாடு செய்திருக்கலாமோ என்னவோ?

கிண்ணுலே காணமல் எதையும் சொல்லக் கூடாது. ஆளுல் இந்த உலகம் அதைக் கவனிக்கிறதா, என்ன? முரு காயியைப் பற்றியும் ஜமீன்தாரைப் பற்றியும் மெல்ல மெல்ல வதந்திகள் புறப்பட்டு உலாவத் தொடங்கின. கமலம்மா முதலில் அதை நம்பவில்லே. பிறகு அவளுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. முருகாயியைத் தன் வீட்டுக்கு வராதே என்று சொன்னல் வதந்தி பலப்பட்டுவிடும் என்று பய்ந்தாள். தந்திரமாக அவளே கடத்தவேண்டு மென்று எண்ணினுள். கூடியவரையில் ஜமீன்தார் கண் ணில் அவள் படாதபடி வேலைகளேக் கொடுத்தும் பேசியும் வந்தாள். இது முருகாயிக்கும் கல்லதாக இருந்தது.

ஆளுல் துரையோ அதற்கு மேலே தந்திரம் செய்தார். கமலம்மா தனக்கு உடம்பு சரியாக இல்லாதபோதெல் லாம் அவள் முருகாயியைப் பக்கத்திலே இருக்கச்சொல்லி வந்தாள். அப்போது ஜமீன்தார் தம் மன்வியைப் பார்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/35&oldid=620444" இலிருந்து மீள்விக்கப்பட்டது