பக்கம்:மூன்று தலைமுறை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று தலைமுறை 31

பதற்காக வருவார். அவள் உடம்பைப் பற்றி அக் கறையோடு முருகாயியை விசாரிப்பார். கமலம்மாவே விடை சொல்வாள். அவர் அதோடு விடமாட்டார். ஏதா வது தந்திரம் செய்து முருகாயியைச் சந்திப்பார்: இரண்டு பேச்சாவது பேசுவார். *

பேசுவார் என்பதை நான் கிதானித்துத்தான் சொல் கிறேன். அவள் அவருடைய வலையில் அகப்பட் டுக் கொள்ளவில்லை என்றுதான் கம்புகிறேன். ஆனல், அவர் ரகசியமாகக் கொடுத்த பணத்தை அவள் ஏன் வாங் கிக் கொண்டாள் என்று விளங்கவில்லை. அவருக்குப் போக்குக் காட்டித் தப்பிக்கொள்ளலாம் என்ற துணி வாகத்தான் இருக்கவேண்டும். - -

கமலம்மா ஒரு தடவை படுக்கையாக இருந்தாளாம். அப்போது சேர்ந்தாற்போல் இரண்டு நாட்கள் முருகாயி ராத்திரி காலங்களில் அவளுக்கு அருகிலே இருக்க நேர்க் தது. ஒரு கணம் கூடத் தன் பக்கத்திலிருந்து அகன்று போகாமல் கமலம்மா பார்த்துக் கொண்டாள். முருகா யிக்கும் அப்படி இருக்க வேண்டும் என்பதுதானே ஆசை

மூன்ருவது நாள் ஜமீன்தார் அவளே வீட்டுக்குப் போகும்போது சந்தித்திருக்கிருர், "நீ இரண்டு நாள் கண் விழித்துக் கஷ்டப்பட்டிருக்கிருய். பாவம் உனக்கு என்ன தக்தாலும் போதாது. இந்தா, இதைச் செலவுக்கு வைத்துக் கொள்” என்று ஒரு பத்து ரூபாயை நீட்டிஞ ராம். அவரிடம் பேச்சை வளர்ப்பதற்கு அவள் பிரியப் படவில்லை. வேண்டாம் என்று. மறுத்தாலோ, அவர் விட மாட்டார். இன்னும் எதையாவது பேசுவார். ஆகவே அதை வாங்கிக்கொண்டு வந்துவிட்டாள். - -

வீட்டுக்கு வந்த பிறகு அந்த கோட்டைக் கையிலே வைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தாள். கசக்கி எறிந் தாள் மறுபடியும் அதை எடுத்துப் பிரித்துச் சரி செய் தாள். கண்ணிலே நீர் துளித்தது. அவள் மனசில் ஏதோ பெரிய போராட்டம் நடக்கிறது என்பது மாத்திரம் எனக்கு நன்ருகத் தெரிந்தது.

'அம்மாவுக்குப் பக்கத்தில் இருந்து கவனித்துக் கொண்டதற்காக எசமான் பத்து ரூபாய் கொடுத்தார்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/36&oldid=620445" இலிருந்து மீள்விக்கப்பட்டது