பக்கம்:மூன்று தலைமுறை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மூன்று தலைமுறை

என்று அந்தப் பணத்தை ஏகாம்பரத்தினிடம் கொடுத்து. விட்டாள். அப்போதுதான் அவளுக்குச் சிறிது ஆறுதல் கிடைத்தது.

" இதற்கா பத்து ரூபாய்' என்று ஏகாம்பரம் முத வில் ஆச்சரியப்பட்டாலும், “இத்தனே தாராளப் பிர புவை விட்டு விட்டு உங்கள் ஊருக்குப் போய்விடலாம் ஒன்று சொன்குயே!” என்று முருகாயியிடம் சொன் குன். அவள் என்ன பதில் சொல்வாள், பாவம் !

முருகாயி தன் சங்கடத்தை வெளிக்காட்டிக்கொள்ள வில்ல்ை, கமலம்மா வெளியிலே சொல்லமாட்டாமல் தவித்தாள். ஒரு வழியும் அவளுக்குத் தோன்றவில்லே.

ஊரில் உலவிய வதந்தி காற்று வாக்கில் ஏகரம்பரத் தின் காதிலும் விழுந்தது. அவன் முருகாயியைத் துளிக் க.டச் சந்தேகிக்கவில்லை. பலபேர் குறிப்பாக அவன் மன சைக் குத்தும்படி பேசினர்கள். அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் அல்லவா? கள்ளங் கபடு தெரியாத அவன் ஒருநாள் ஆத்திரக் தாங்காமல் முருகாயியையே கேட்டுவிட்டான். அப்போதுதான் அவளிடத்திலும் பெண்மை இருக்ததென்பதை உணர்ந்துகொண்டேன்.

அவள் துடிதுடித்துப் போய்விட்டாள். மூர்ச்சை போட்டு விழவில்லே: அதுதான் குறை. நீங்கள் கூடவா என்னைச் சந்தேகிக்கிறீர்கள்? உங்கள் நல்லெண்ணத்தை யும் அன்பையும் வைத்துக்கொண்டுதானே நான் உங்: ரோடிருக்கிறேன்? என் உடம்பில் உயிர் இருக்கும் வரை யில் உங்களுக்குத் துரோகம் செய்யமாட்டேன்' என்று அழுது புலம்பிளுள். அவன் ஆறுதல் அடைந்தான்.

முருகாயி அரண்மனைக்குப் போக விரும்பவில்லை. ஆளுல் கமலமோ அவளே விடவில்லை. எப்போதும் தன் கண்ணுக்கு முன்னலே அவுளேக் காவல் வைக்க விரும்பி ஞள்.முருக்ாயி எத்தனேதான் அவள் இஷ்டப்படியே இருக் தாலும் அவளுக்கு இவளிடம் கம்பிக்கை விழவில்லே. அவ ளுடைய சந்தேகம் பலப்பட்டுக்கொண்டே வந்தது. அரண்மனைக்கு வராமலே இருந்துவிடும்படி சொல்லலாம். ஆளுல் கண் மறைவில் என்ன என்ன கடக்குமோ?இப்படி அவள் உள்ளம் எண்ணித் திடுமாறியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/37&oldid=620446" இலிருந்து மீள்விக்கப்பட்டது