பக்கம்:மூன்று தலைமுறை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று தலைமுறை 33

ஊரார் மறைவிலும் குறிப்பாகவும் ஏகாம்பரத்தை ஏசி வந்தார்கள். தன் மனைவியைச் சந்தேகிக்கவும் அவன் மனம் இடங் கொடுக்கவில்லை. ஊராரைக் கண்டிக்கவும் தைரியம் இல்லை. கோழையிலும் கோழை படு கோழை அவன்.

கமலமும் அப்படிப்பட்டவள்தான்; உறுதியில்லாத மனசும் உடம்பும் உடையவள். திட்டமாக இதற்கு இது செய்யவேண்டும் என்று தீர்மானிக்க அவளால் முடியவே முடியாது. ஒருநாள் கமலம் ஏகாம்பரத்தைத் தனியே அழைத்து, 'ஊராரெல்லாம் என்ன என்னவோ பேசிக் கொள்கிருர்களாம். உன் பெண்டாட்டியை அடக்கி வை. இப்படியெல்லாம் ஊர் சிரிக்கும்படி விடாதே’ என்று சொல்லி அவனைப் பயமுறுத்தினள். உங்கள் சொந்தப் புருஷரையே நீங்கள் நம்பவில்லையா?’ என்று அவன் கேட் டிருக்கலாம். முருகாயியைப் போன்ற தைரியம் அவனுக்கு இருந்திருந்தால் அப்படித்தான் கேட்டிருப்பான். ஆமூல அவன்தான் அப்படிப்பட்டவன் அல்லவே! எதிர் வார்த்தை பேசாமல் முகத்தைத் தொங்கவிட்டுக்கொண்டு வந்து சேர்ந்தான்.

முன்னமே புண்பட்டுப் போன அவன் உள்ளத்தில் கமலம்மா சொன்ன வார்த்தைகள் என்ன வேதனையை உண்டாக்கினவோ தெரியவில்லை; அதற்கு ஏற்றபடி கம லத்தின் பிறந்தகத்திலிருந்து வந்த இரண்டு தடியர்கள் ஊரில் இருந்த வதந்தியைக் கேட்டார்கள்; கமலமும் அவர் களிடம் சொல்லி இருக்கலாம். அவர்களும் என்றைக்குக் கமலம் அவனிடம் எச்சரிக்கை செய்தாளோ, அன்றே அவனேக் கடுமையாக மிரட்டினர்கள். 'பயலே! நீ ஜாக் கிரதையாகப் பிழைக்காவிட்டால் உன் உடம்பு எலும்பை யெல்லாம் கொறுக்கி, உன் பெண்டாட்டியை கார் காராகக் கிழித்துவிடுவோம்” என்று பயமுறுத்தினர்கள்.

எல்லாம் சேர்ந்துகொள்ளவே அந்தக் கோழை இனி வாழ்வதிலே பிரயோசனம் இல்லை என்று தீர்மானித்து விட்டான். முருகாயியின் அழகையும் இன்பத்தையும் அன்பையும் மறந்தான். என்ன என்ன விபரீதங்கள் கேர்ந்துவிடுமோ என்ற பயம் அவன் உள்ளத்தை ஆக்கிர

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/38&oldid=620447" இலிருந்து மீள்விக்கப்பட்டது