பக்கம்:மூன்று தலைமுறை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று தலைமுறை 37

" கான் எவ்வளவு பொறுமையோடு உன் கதையைக் கேட்டு வந்தேன். நடு நடுவே குறுக்கிட்டுச் சில விஷயங் களேச் சொல்லவேண்டுமென்ற வேகம் எனக்கு உண்டா யிற்று. ஆனல் கதையின் சுவாரஸ்யம் கெட்டுப்போய் விடுமென்று சும்மா இருந்தேன். நீ அங்கலாய்க்கும் போதெல்லாம் உனக்கு ஆறுதல் தரும் சமாசாரத்தைச் சொல்ல வாயெடுத்தேன். ஆனால், எல்லாவற்றையும் சேர்ந்தாற்போல் சொல்லிவிடலாம் என்ற எண்ணத்தால் பேசாமல் இருக்து விட்டேன். அண்ணு, ஒரு விஷயத்தை மாத்திரம் முதலிலே சொல்லிவிடுகிறேன். அப்போது தான் உனக்கு நான் சொல்லும் கதையில் அதிகமான சுவை உண்டாகும். நீ கிறுத்திய கதையின் சோக கட்டம் அதோடு கின்று விட்டது. அதற்கு மேல் எல்லாம் நல்ல சமாசாரங்தான்.” -

" தம்பி, என்னே இப்படி யெல்லாம் சடுகுடு காட்டி வாட்டி யெடுக்காதே. என் முருகாயி என்ன ஆளுள் ? அவளே பார்த்திருக்கிருயா ? செளக்கியமாக இருக் கிருளா ?” -

கழுதை சிரித்தது. வயசு ஆளுலே மயக்கமும் கூட வந்து விடும்போல் இருக்கிறது. உன் கதையை முடிக்கும் போது மூன்று தலைமுறைக் கதை என்று சொன்னயே : அந்த முதல் தலைமுறையில் வாழ்ந்திருந்த முருகாயியை முளேத்து மூன்று இலே விடாத நான் எப்படி அண்ணு பார்த்திருக்க முடியும் ??

'தப்பு, தப்பு: ஒப்புக்கொள்கிறேன். போதும் தம்பி உன் பீடிகை. கதையைச் சொல்' என்று படபடப்புடன் குட்டிச்சுவர் கூறியது. மேலே கழுதை சொல்லத்தொடங் கியது.

瓷 、兴 落

(திருகாயி கமல புரத்துக்குப் போன செய்தி வரைக் கும் உன் கதை. அதற்குப் பிறகு என் கதை.

அவள் கமல புரத்துக்கு வந்து சில மாசங்களில் ஒரு பெண் குழந்தையைப் ப்ெற்றெடுத்தாள். அவள் தன் புருஷனே இழந்தவுடனே உயிரை விட்டிருப்பாள். ஆளு. இலும் அவனுடைய ஞாபகத்தை உண்டாக்கும் குழந்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/42&oldid=620451" இலிருந்து மீள்விக்கப்பட்டது