பக்கம்:மூன்று தலைமுறை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$翰 மூன்று தலைமுறை

ணிர் விட்டபடி கிற்கிறேன். இந்தப் பழங் கதையைக் கேட்பவர் யார்? ஏதோ கீ கேட்டாய்: கான் சொன்னேன். இனிமேல் உன் கதையைச் சொல் தம்பி!' என்று பெரு மூச்சு விட்டது குட்டிச் சுவர்.

7 "தலையிருக்க வால் ஆடுமா என்ற பழ மொழியைக் கேட்டிருக்கிருயா அண்ணு' என்று கேட்டது கழுதை.

"பழமொழி கிடக்கட்டும்; தம்பி. உன் கதையைச் சொல். கேட்கிறேன்' என்றது சுவர்.

'அந்தப் பழமொழியிலேதான் என் கதை ஆரம்பமா கிறது. நீ இதுவரையில் தலேயைச் சொன்னுய். நீ எங் கள் பாட்டனர் காலத்தைச் சேர்ந்தவன். நானே நேற் றுப் பிள்ளை. ஆனலும் எனக்கும் பாட்டனருக்கும் தொடர்பு இல்லாமல் போய் விட்டதா? உன் கதைக்கும் என் கதைக்கும் தொடர்பு உண்டு.”

"என்ன? என்ன தம்பி புதிர் போடுகிருய்?? 'இல்லை அண்ணு; உள்ளதைத்தான். சொல்ல வருகி றேன். நீ சொன்ன கதையைக் கேட்டு என்னைப்போல வேறு யாரும் ரசிக்க முடியாது. ஏனென்ருல் சொன்ன இந்த முடியாத கதையின் முடிவு எனக்குத் தெரியும். | தலையைச் சொன்னாய். எனக்கு வால் தெரியும். உன் கதையைக் கேட்ட பிறகுதான் என் கதைக்குச் சுவாரசி யம் ஏற்பட்டது. பல விஷயங்கள் தெளிவாயின.

"என்ன தம்பி சுற்றிச் சுற்றி வருகிருயே? உனக்கு நான் சொன்ன கதையின் முடிவு தெரியுமென்று சொல் இருயேl இளம்பிள்ளே! பழைய சமாசாரத்தைப் பற்றி உனக்கு எப்படித் தெரியும்?'

"ஏன் அண்ணு அவ்வளுவு அவசரப்படுகிருய்: கான் ஆரம்பிப்பதற்கு முன்னல் கேள்வி மேல் கேள்வி கேட் டுத் திக்குமுக்காடச் செய்கிருயே?”

சரி, உன்இஷ்டம்போல் சொல்” என்று மெளனம் சாதிக்கத் தொடங்கியது குட்டிச் சுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/41&oldid=620450" இலிருந்து மீள்விக்கப்பட்டது