பக்கம்:மூன்று தலைமுறை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ன்று தலைமுறை 33

முருாையியின் மகள் முருகாயியைப்போலப் பட்டுப் புடைவை கட்டிக்கொள்ளவில்லை : இரவுக்கு இரவே வீட்டை விட்டு ஒடிப்போகவும் இல்லை. அந்தப் பெண் அணுக்கு ஒருகுழங்தை பிறந்தது; அதுகூடப் பெண்குழந்தை தான். அங்கக் குழந்தை பிறப்பதற்கு முன்ேைல முருகாயி கண்ணே மூடிக்கொண்டாள். அவள் அவ்வளவு காலம் இருந்ததே பெரிது.

பழைய முருகாயி போனலும், அந்தக் குடும்பத்துக் குப் புது முருகாயி வந்துவிட்டாள். முருகாயியின் பேத் திக்கும் முருகாயி என்றுதான் பெயர். அவளும் நல்ல அழகிதான். அண்ணு, அவளே பார்த்தால் உன் முருகா விக்கும் அவளுக்கும் வித்தியாசமே தெரியாது. அப்படி எல்லோரும் சொல்லிக்கொள்கிரு.ர்கள்.

'கான் எப்படித் தம்பி அந்தப் பெண்ணேப் பார்க்க முடியும் ?’ என்று பெரு மூச்சு விட்டபடியே சுவர் கேட்

பொறு, பொறு, கதை முழுவதையும் கேள். உனக்குச் சந்தோஷத்தைத் தரும் கதை இது. பெரிய முருகாயியின் கதை அல்ல; சின்ன முருகாயியின் கதை. அந்தச் சின்ன முருகாயி வளர்ந்து வக்தாள், ஒரு நாள் அந்த வீட்டுக்கு ஆரே வந்தார்கள். ஜமீன்தாருடைய ஆள் என்று சொன் ஞர்கள். ஜமீன்தார் வீட்டுப் பேச்சு எடுத்தாலே அந்த வீட்டில் எல்லோரும் கடுங்குவார்கள். தங்கள் குடும்பத் தைக் குலேத்த கூட்டம் என்று உள்ளுற அவர்களுக்கு வெறுப்பு இருந்தது. ஆகைய ல் மீன்தார் ஆள் என்ற போது அவர்களுக்கு எதிர் பாராத தடுமாற்றம் உண்டா யிற்று. வங்க ஆள் இந்தக் குமார்புரம் ஜமீனிலிருந்து வந்திருந்தான். அது தெரிந்தபோது சின்ன முருகாயியின் விட்டாருக்கு அதிகக் குழப்பம் உண்டாயிற்று. வந்தவளுே துப்பறிகிற தோரணையில் விசாரணை செய்யத் தொடங்கி ஞன். முப்பது காற்பது வருஷங்களுக்கு முன்னலே இந்த விட்டில் முருகாயி என்று ஒருத்தி இருந்தாளாமே?” என்று கேட்டான், அதைக் கேட் டவர்களுக்கு வயிறு பகிரென்றது; பழைய சண்டையை மீண்டும் கின்ாப்ப வந்து விட்டானே !' என்று பயந்தார்கள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/44&oldid=620453" இலிருந்து மீள்விக்கப்பட்டது