பக்கம்:மூன்று தலைமுறை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 மூன்று தலைமுறை

அங்கே போய் இருக்கலாம். அந்தப் பக்கத்தில் இன்னும் சில வீடுகளைக் கட்டி அரண்மனை வேலைக்காரர்களேக் குடி யிருக்கச் செய்யலாம் என்று கினேக்கிறேன்' என்று துரை சொன்னர். அவர் எது சொன்னலும் கேட்பதற்குத் தயாராக இருக்கிருர்கள் இவர்கள்.

'முருகாயிக்குச் சம்மதமென்று சொன் ஞயே. அவள் பயப்படமாட்டாளா? சிறு பெண்தானே ?”

"அவள் சிறு வயசிலிருந்தே துணிவுடையவள். பயமில் லாமல் எங்காலுைம் போய்விட்டு வருபவள். இதை கான் ான்ருக அறிவேன். அவளுக்குக் கொஞ்ச கஞ்சம் பயம் இருந்தாலும் போகும்படியாக, பக்கத்தில் வீடுகளேக் கட்டிச் சில மனிதர்களேக் குடிவைக்கப் போவதாக வேறு ஜமீன்தார் சொல்லிவிட்டாரே !”

'துரை மகா கெட்டிக்காரர், மிகவும் உத்தமர் என்றே தோன்றுகிறது” என்று குட்டிச்சுவர் சொல்லியது.

'அதற்கு என்ன சந்தேகம்? இன்னும் கேள். இந்த வண் ணுன் மடுவைத் அார்த்துவிட்டு இங்கே ஒரு பிள்ளே யார் கோவிலேக் கட்டப் போகிரு ராம். பேயிருந்த இடம் மாறிப் பிள்ளையார் இருக்கும் இடமாகப் பேர்கிறது.'

'சபாஷ் l'

‘அண்ணு, நீ மறுபடியும் வாழப் போகிருய், பழைய முருகாயி போய்ப் புது முருகாயி வந்ததுபோல, நீயும் புது அவதாரம் எடுத்து மீண்டும் விருந்து வேடிக்கைகளைப் பார்க்கப் போகிருய். ஆமாம்; இப்பொழுதே சொல்லிவிட் டேன். என்னே மாத்திரம் மறந்து விடாதே!’

கழுதை சொல்லி முடித்ததோ இல்லையோ, குட்டிச் சுவர் பிரமை தட்டிப் போய்ப்படபட வென்று அப்படியே சாய்ந்து விட்டது. அவ்வளவு காலம் மற்றப் பகுதிகளெல் லாம் இடிந்து விட்டாலும் பழைய வீட்டின் தனி அடை யாளமாக நின்றிருந்த அதுவும் அன்று விழுந்து விட்டது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/53&oldid=620462" இலிருந்து மீள்விக்கப்பட்டது