பக்கம்:மூன்று தலைமுறை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று தலைமுறை 47

'முருகாயியை நீ பார்க்கப் போகிருய். அவள் உன்னி டம் வரப் போகிருள்.”

'என்ன தம்பி விளையாடுகிருயா? அவள் தன் பாட்டி வாழ்ந்த வீட்டைப் பார்க்க வரப்போகிருளா? அவளுக் குத் துரை நல்ல வீடு கொடுத்திருப்பாரே அந்தக் கால்த் தில் இந்த வீடு விருந்தும் வேடிக்கையுமாக இருந்ததென் பதை அவளுக்கு ஆராவது சொன்னர்களோ? இப்போது இந்தக் குட்டிச் சுவரைப் பார்த்தால் என்ன தெரியப் போகிறது ? நான் அவளோடு பேச முடிந்தால் பழைய கதையை விரிவாக எடுத்துச் சொல்வேனே அவளுடைய பாட்டி மாசு மறுவற்றவள் என்பதை அடித்துச் சொல் வேன். ஆனால் அது கடக்கக் கூடிய காரியமா ? அப்படி ஏதாவது கட்ந்தால் கூட, இங்கே ஏதோ பேய் இருந்து கொண்டு பேசுகிறது என்று எண்ணிப் பயந்து கொண்டு ஒடிப்போய் விடுவாள். என்ன பயங்கொள்ளி உலகம்'

"பயம் ஒன்றும் இல்லை. இந்த முருகாயியும் தைரிய சாலிதான். அவள் தன் கண்வனுடனும் தாய் தகப்பனுட னும் இங்கேயே வந்து வாழப் போகிருள்.

'தம்பி, என்னே இப்படி யெல்லாம் தாண்டில் போட்டு வாங்காதே. சொல்லுவது எதையும் விளே யாட்டாக கினேப்பதற்கு இல்லை. நீ மிகவும் ஆழமான வன் அப்பா. சமாசாரத்தைத் தெளிவாகச் சொல்'

'ஜமீன்தாருக்கு முருகாயியும் அவள் குடும்பமும் இந்த ஊருக்கே வந்து விட்டதில் எல்லேயில்லாத திருப்தி. ஏதோ ஒரு பழைய வீட்டில் இப்போதைக்கு இருக்கும்படி ஏற்பாடு செய்திருக்கிருர். புதிய வீடாக ஒன்று கட்டிக் கொடுக்க வேண்டுமென்பது அவர் விருப்பம். அவர் இவர்களிடம் ஒரு சமாசாரம் கேட்டாராம். பழையபடி ஏகாம்பரம் வாழ்ந்திருந்த வீட்டைக் கட்டித் தக்தால் அங்கே இருப்பீர்களா?' என்று கேட்டார். மற்றவர்களா ளுல் பயப்படுவார்கள். முருகாயிக்கு அது சம்மதமாகவே இருந்தது. ஊராரெல்லாம் அங்கே பேய் இருக்கிறது என்று முன்பு சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதெல் லாம் ஒன்றும் இல்லே. உங்களுக்குத் தைரியம் இருந்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/52&oldid=620461" இலிருந்து மீள்விக்கப்பட்டது