பக்கம்:மூன்று தலைமுறை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

垒 மூன்று தலைமுறை

"கி மிகவும் விவகார ஞானம், தெரிந்தவன்போல இருக்கிறதே! நல்ல வேளே! இவ்வளவு காலத்துக்குப் பிறகு, பேசுவதற்கு கீ கிடைத்தாயே! நடுவிலே பேசாம லேயே இருந்துவிட்டதல்ை, அப்படி மாறி மாறி வரு கிறது வார்த்தை. வயசு ஆகிவிட்டதும் ஒரு காரணம். இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாதே தம்பி.” 'எதை? முன்னே சொன்னதையா? பின்னே சொன்னதையா?” என்று கேட்டது கழுதை. -

'எதை வேண்டுமானலும் வைத்துக்கொள். இவ் வளவு கெட்டிக்காரத் தனமாகப் பேசும் உன்னேக் கண் டால் எனக்குச் சங்தோஷம் உண்டாகிறது. உன்னிடத் தில் எத்தனையோ பேச வேண்டும். ஆளுல், பேச எண்ணி குல் துக்கம் பொங்கி வருகிறது.”

"துக்கம் என் அண்ணு?” - “பழைய ஞாபகம் வருகிறது. அதல்ை துக்கம்.' "அது என்ன பழைய ஞாபகம்? என் மாதிரி யாரா வது உனக்குப் பழைய சிநேகிதர்கள் இருந்தார்களா?"

"அதை என் கேட்கிருய்? அது பெரிய கதை. முதலில் நீ உன் கதையைச் சொல். பிறகு என் கதையைச் சொல்கிறேன்.” - - - "என் கதை என்ன அண்ணு? நான் வயசில் எவ் வளவோ சிறியவன். எனக்குத் தெரிந்ததோ கொஞ்சம், அதைப் பிறகு சொல்கிறேன். நீ உன் கதையைச் சொல்லு: கேட்கிறேன்.”

"அப்படியானல் உன் ஊரை மாத்திரம் சொல்லி விடு, பிறகு என் கதையைச் சொல்கிறேன்.”

'கான் இருபது மைல் தாரத்தில் இருக்கிறதே, கோழிப் பேட்டை, அங்கிருந்து வருகிறேன்.”

'அடேடே இந்த ஜமீனுக்கும் அப்பாலிருந்தா வரு கிருய்? கோழிப்பேட்டையா! அதே கோழிப்பேட்டையா?” “எக்தக் கோழிப் பேட்டை உனக்குத் தெரியுமா அண்ணு? நீ அங்கே போயிருக்க முடியாதே'

'கான் எங்கேதான் போக முடியும், தம்பி? இருந்த இடத்தில் இருந்தே எத்தனையோ விஷயங்களைத் தெரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/9&oldid=620394" இலிருந்து மீள்விக்கப்பட்டது